×

கடனுக்கு வட்டி மட்டும் கட்டும் நிலையில் அரசு உள்ளது: டேனியல் ஜேசுதாஸ், சமூக ஆர்வலர்

கடந்த 2014ல் தமிழ்நாடு அரசு நிதி வரவு செலவு குறித்து தகவல் உரிமை சட்டத்தில் வாங்கினேன். அப்போது, ₹13,650 கோடி வட்டி மட்டும் அரசாங்கம் கட்டி வந்ததாக கூறியது. அப்போது அந்த அளவுக்கு கடன் இருந்தது.  ஒவ்வொரு கடன் தொகையை வாங்கி திருப்பி செலுத்தாமல் வட்டி மட்டும் செலுத்தும் சூழலில் தான் தமிழக அரசு இருந்து வருகிறது.  இலவசங்களால் தான் அரசுக்கு அதிகளவு கடன் நெருக்கடி ஏற்படுவதற்கு காரணம். தற்போது அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசு என்பது சரியான நபர்களுக்கு சென்றால் பரவாயில்லை. அதாவது வறுமைகோட்டிற்கு கீழ்  இருப்பவர்களுக்கு பொங்கல் பரிசு தொகை பயன்படும். ஆனால், எல்லோருக்கும் என்பது பயன்படாமல் தான் போய் விடும்.  கஜாபுயல் பாதிக்கப்பட்ட மக்கள் வாழ்வாதாரத்தை முற்றிலுமாக இழந்து தவித்து வருகின்றனர். பொங்கல் பரிசுக்காக அரசு ஒதுக்கும் இந்த நிதி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு சென்றால் பரவாயில்லை. தமிழகத்தில் ஒரு பக்கம்  சந்தோஷம். ஒரு பக்கம் துக்கமாக இருந்தால் நன்றாக இருக்காது. அதைப்பார்த்து தான் நான் வழக்கு தொடர்ந்தேன். என் பின்னாடி இருந்து யாரும் என்னை இயக்கவில்லை. தற்போது தமிழக அரசுக்கு ₹3 லட்சத்து 53 ஆயிரம்  கோடி கடன் இருப்பதாகவும், ₹17 ஆயிரம் கோடி வட்டி மட்டும் கட்டுவதாகவும் தகவல் உரிமை சட்டத்தின் மூலம் தெரிய வந்துள்ளது. அதுவும், ஒரு குறிப்பிட்ட சில நிறுவனங்களின் விவரங்களை மட்டுமே தந்துள்ளது. பல  நிறுவனங்களிடம் வாங்கிய கடன் குறித்து பதில் கொடுக்காமல் மறைத்து விட்டனர்.

 இலவசம் கொடுப்பது தப்பில்லை. அது மக்களுக்கு பயன் உள்ளதாக இருக்க வேண்டும். உதாரணத்திற்கு கல்வியை இலவசமாக கொடுங்கள். மீனை ெகாடுப்பதை விட மீன் பிடிப்பதை கற்று கொடுப்பதே சிறந்தது என்பது  போன்று, ஒருவருக்கு கல்வியை கொடுத்து விட்டால், அவனே சுயமாக தொழில் செய்தோ, வேலை செய்தோ வருவாய் ஈட்டிக்கொள்வான்.  பெரும்பாலான குடும்பங்கள் தங்களது குழந்தைகளை படிக்க வைக்க முடியாமலும், சில குடும்பங்கள் மேற்படிப்புக்கு படிக்க வைக்க முடியாமலும் உள்ளனர். அது போன்றவர்களின் குழந்தைகளுக்கு இலவசமாக கல்வி வழங்க  ஏற்பாடு செய்யலாம். ஒரு சில ஸ்காலர்ஷிப் கூட ெபரிய போராட்டங்களுக்கு இடையே தான் ஒரு சிலர் ஸ்காலர்ஷிப்பை பெரும் நிலையில் உள்ளனர். வீட்டு வரி, குடிநீர் வரி, சேவை வரி, பஸ் கட்டணம் வரை அனைத்தையும் உயர்த்தி விட்டனர். இவ்வாறு மக்களிடம் வரி என்கிற பெயரில் பல ேகாடி வருவாய் ஈட்டி வருகின்றனர். இந்த வரியை கொண்டு வறுமைக்கோட்டிற்கு  கீழ் உள்ளவர்களுக்கு ேதவையான உதவிகளை செய்யலாம். அதை விடுத்து எல்லோருக்கும் ₹ஆயிரம் கொடுப்பது வீண். மக்கள் வருடம் முழுவதும் வாழ வழி செய்ய வேண்டும்.

 வறுமை கோட்டிற்கு கீழ் இருப்பவர்களை அரசு முழுமையாக தரம் பிரிக்கவில்லை. உண்மையில், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கான ரேஷன் அட்டை வழங்கப்பட்டுள்ளதா என்பதிலேயே ஏகப்பட்ட குளறுபடிகள்  உள்ளது. இதை உடனடியாக அரசு கள ஆய்வு செய்து சரியான நபர்களுக்கு ரேஷன் அட்டை வேண்டும். இல்லையெனில் வறுமை கோட்டில் கீழ் இருக்கிறேன் என்று பலர் கூறி அரசின் இலவசங்களை ஏமாற்றி பெற்று கொள்ளும்  நிலை தான் ஏற்படும்.





பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : government ,Danielle Jesudas , Interest, debt, Government , construction, Daniel Jesudas, social activist
× RELATED “இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை ஒன்றிய...