×

ரிச்சர்ட்சை முந்தினார் ரோகித்

ஆஸ்திரேலிய மண்ணில் அதிக சதம் விளாசிய வெளிநாட்டு வீரர்கள் பட்டியலில் இந்தியாவின் ரோகித் ஷர்மா முதலிடம் பிடித்துள்ளார். இதுவரை 22 சதம் விளாசியுள்ள அவர், ஆஸ்திரேலியாவில் மட்டும் 4 சதங்களை அடித்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் நட்சத்திரம் விவியன் ரிச்சர்ட்ஸ் 3 சதம் அடித்ததே முந்தைய சாதனையாகும். அதை ரோகித் நேற்று முறியடித்தார். இந்திய அணி கேப்டன் கோஹ்லி உட்பட 9 வீரர்கள் தலா 2 சதம் அடித்துள்ளனர்.

டோனி 10,000 :

சிட்னியில் நேற்று 51 ரன் எடுத்த டோனி, ஒருநாள் போட்டிகளில் 10,000 ரன் கடந்த 5வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். உலக அளவில் அவருக்கு 13வது இடம் கிடைத்துள்ளது. டோனி ஏற்கனவே 10,173 ரன் எடுத்திருந்தாலும், அதில் ஆசிய லெவன் அணிக்காக எடுத்த 174 ரன்கள் கணக்கில் கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 13 வீரர்களில் கோஹ்லி, டோனி இருவர் மட்டுமே தற்போது விளையாடிக் கொண்டிருக்கின்றனர். மற்றவர்கள் அனைவரும் ஓய்வு பெற்றுவிட்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Richards , Rohit Sharma, the highest of Australian soil, Vivian Richards
× RELATED பாஜக எம்.எல்.ஏக்கள் நில அபகரிப்பு...