×

கால்டாக்சி சேவையால் 36 ஆயிரம் பேர் பலன் : மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல்

சென்னை: கால்டாக்சி சேவையின் மூலம் 36,148 பேர் பலனடைந்துள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, மெட்ரோ ரயில் நிர்வாகம் கூறியுள்ளதாவது:சென்னையில் மெட்ரோ ரயில் பயணிகளுக்காக குறைந்த கட்டணத்தில் வாடகை கார் மற்றும் ஷேர் ஆட்டோ சேவைகள் தொடங்கப்பட்டது. கிண்டி, திருமங்கலம், ஆலந்தூர், அசோக்நகர், கோயம்பேடு உள்ளிட்ட 8 மெட்ரோ ரயில் நிலையங்களில் ஷேர் ஆட்டோ சேவையும், வடபழனி, டி.எம்.எஸ் உள்ளிட்ட 5 மெட்ரோ ரயில் நிலையங்களில் கால்டாக்சி சேவையும் செயல்பட்டு வருகிறது. நவம்பர் மாதம் 12ம் தேதி இதற்கான கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டு குறைக்கப்பட்டது. இதனால், கடந்த 2018 நவம்பர் மாதம் 33 ஆயிரத்து 866 பேர் இந்த சேவையில் பயனடைந்தனர்.

இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதத்தில் அதிகபட்சமாக 36 ஆயிரத்து 148 பேர் இந்த சேவையால் பயனடைந்துள்ளனர். இதில், ஷேர் ஆட்டோ சேவையை 31 ஆயிரத்து 86 பேரும், வாடகை கார் சேவையை 5 ஆயிரத்து 62 பேரும் பயன்படுத்தியுள்ளனர். ஆலந்தூர் மற்றும் கோயம்பேடு வரையிலான சேவையை மட்டும் 9 ஆயிரத்து 531 பேர் பயன்படுத்தியுள்ளனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Call Taxi Service, Metro Rail Administration, Share Auto
× RELATED சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் 3...