- Nadrampalli
- நாத்ராம்பள்ளி
- மல்லரிபட்டி கிராமம்
- கொந்தோகிந்தனப்பள்ளி
- நாத்ராம்பள்ளி, திருப்பத்தூர் மாவட்டம்
- நாத்ராமல்லி
- பரபரப்பை
நாட்றம்பள்ளி: திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே உள்ள கொண்டகிந்தனபள்ளி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் மல்லரிபட்டி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ஒரு சமூகத்தை சேர்ந்த 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் தேர்தலின்போது, கொண்டகிந்தனபள்ளி ஊராட்சி பழையவூரில் உள்ள வாக்குச்சாவடி மையத்திற்கு சென்று வாக்களித்து வந்தனர். இந்நிலையில் வரும் 6ம் தேதி நடைபெற உள்ள சட்டமன்றதேர்தலையொட்டி திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில் மல்லரிபட்டி என்ற கிராமம் முற்றிலும் நீக்கப்பட்டிருந்தது. மேலும் அங்குள்ள 150க்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் காணவில்லையாம். ஆனால் அதற்கு பதிலாக அருகே உள்ள ஆத்துமேடு, ராமகவுண்டனூர், பலராமன்வட்டம், போத்தன்குட்டை ஆகிய பகுதிகளில் உள்ள வாக்காளர் பட்டியலில், மல்லரிபட்டி கிராமத்தை சேர்ந்த வாக்காளர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளது. இதையறிந்த கிராம மக்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். இதனால் ஆத்திரமடைந்த மல்லரிபட்டி கிராம மக்கள், இன்று காலை திடீரென அதே பகுதியில் ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, ரேஷன் கார்டுகளுடன் ஒன்று திரண்டனர். அங்கு சாலையில் அட்டைகளை குவித்து கருப்புக்கொடி ஏந்தி திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகலவறிந்த நாட்றம்பள்ளி போலீசார், வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள், ‘எங்கள் கிராமத்தின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது. எங்கள் ஊர் பெயர் இல்லாததால் எங்களுக்கு நலத்திட்ட உதவிகள் ஒன்றும் கிடைக்காது. வாக்காளர் பட்டியலில் எங்கள் கிராமத்தின் பெயரை சேர்க்கவேண்டும். அதுவரை வாக்களிக்கமாட்டோம். மேலும் இப்பிரச்னையை தீர்ப்பதற்கு உடனே பிடிஓ வரவேண்டும்’ என ஆவேசத்துடன் கூறி மறியலில் கோஷமிட்டனர். இதனால் அங்கு 2 மணி நேரத்திற்கும் மேலாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது….
The post நாட்றம்பள்ளி அருகே இன்று பரபரப்பு: வாக்காளர் பட்டியலில் ஒரு கிராமமே மாயம்: கருப்புக்கொடியுடன் மக்கள் மறியல் appeared first on Dinakaran.
