6 கூடுதல் டிஜிபிக்கள் டிஜிபிகளாக பதவி உயர்வு - உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்ட்டி உத்தரவு

சென்னை: தமிழக காவல் துறையில் பணியாற்றி வரும் 6 கூடுதல் டிஜிபிகளை டிஜிபிகளாக பதவி உயர்வு வழங்கி தமிழகம் உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்ட்டி உத்தரவிட்டுள்ளார்.இதுகுறித்து தமிழகம் உள் துறை செயலாளர் நிரஞ்சன் மார்ட்டி ேநற்று பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:1989ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரிகளாக பணியில் சேர்ந்த ஏடிஜிபிக்கள் ஜாபர் சேட், ஸ்ரீலட்சமி பிராசாத், அசுதோஸ் சுக்லா, மிதிலேஷ் குமார், தமிழ் செல்வன், ஆசிஸ் பேங்ரா ஆகியோர் தற்போது பல்வேறு துறைகளில் கூடுதல் டிஜிபிகளாக பதவி வகித்து வருகின்றனர். இவர்களுக்கு தற்போது பணி மூப்பு அடிப்படையில் டிஜிபிகளாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.விரைவில் இவர்களுக்கு புதிய பணியிடங்கள் வழங்கப்படும் என்று போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: