×

பானுசாலி கொலை வழக்கு பாஜ எம்எல்ஏ. அமெரிக்கா ஓட்டம்?

அகமதாபாத்: குஜராத்தில் பாஜ முன்னாள் எம்எல்ஏ ஜெயந்தி பானுசாலி கொலை வழக்கில் சந்தேகிக்கப்படும் பாஜ எம்எல்ஏ சபில் படேல், அமெரிக்காவுக்கு தப்பி விட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. குஜராத் மாநிலம், அப்தாசா சட்டப்பேரவை தொகுதியில் 2007 முதல் 2012ம் ஆண்டு வரை பாஜ எம்எல்ஏ.வாக இருந்தவர் ஜெயந்தி பானுசாலி (53). 2012ல் நடந்த தேர்தலில், இவரை காங்கிரஸ் வேட்பாளர் சபில் படேல் தோற்கடித்தார். பின்னர், 2 ஆண்டுகளில் சபில் படேல் பாஜ.வில் சேர்ந்தார். இவருக்கு கட்சியில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இதனால், பானுசாலிக்கும்  சபிலுக்கும் மோதல் ஏற்பட்டது. இதனால், பானுசாலியின் அரசியல் வாழக்கைக்கு முடிவு கட்ட சபில் முடிவு செய்ததாக கூறப்படுகிறது. பானுசாலி ஒரு பெண்ணுடன் படுக்கை அறையில் இருப்பது போன்ற சிடி.யை சபில், அவரது கூட்டாளிகள் வெளியிட்டனர்.

இந்நிலையில், குஜராத்தின் புஜ் நகரிலிருந்து அகமதாபாத்துக்கு கடந்த 8ம் தேதி ரயிலில் திரும்பிக் கொண்டிருந்த பானுசாலி, மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இது தொடர்பாக சபில் படேல், அவரது மகன், ஒரு பெண் உட்பட 4 பேர் மீது போலீசாருக்கு சந்தேகம் உள்ளது.
இந்த கொலைக்குப் பிறகு சபில் தலைமறைவாகி விட்டார். அவரை குஜராத் சிஐடி போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில், சபிலின் மகன் சித்தார்த் படேல் அளித்த பேட்டியில், ‘‘தனது தந்தை  தொழில் விஷயமாக அமெரிக்கா சென்றுள்ளார்’’ என்றார். இது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : BJP ,Bhajasoli ,America , Jayanthi Banusali, murder case, USA
× RELATED பாஜ ஆட்சிக்கு வந்தால் தேர்தல்...