×

மூன்று தொகுதி இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் முடிவடைந்தது: மனுக்கள் மீது இன்று பரிசீலனை நடக்கிறது

பெங்களூரு: மாநிலத்தில் காலியாக இருக்கும் பெலகாவி மக்களவை தொகுதி மற்றும் மஸ்கி, பசவகல்யாண் ஆகிய இரண்டு பேரவை தொகுதிகளுக்கு நடக்கும் தேர்தலில் வேட்புமனு தாக்கல் நேற்றுடன் முடிந்தது. மனுக்கள் மீது இன்று பரிசீலனை நடக்கிறது. மாநிலத்தில் காலியாக இருக்கும் பெலகாவி மக்களவை தொகுதி மற்றும் பசவகல்யாண், மஸ்கி ஆகிய இரு சட்டப்பேரவை தொகுதிகளுக்கு வரும் ஏப்ரல் 17ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 23ம் தேதி தொடங்கி நேற்று பகல் 3 மணியுடன் நிறைவடைந்தது. கடைசி நாளான நேற்று பெலகாவி தொகுதியில் பாஜ வேட்பாளராக போட்டியிடும் மங்களா அங்கடி மனு தாக்கல் செய்தார். அப்போது முதல்வர் எடியூரப்பா, மாநில பாஜ தலைவர் நளின்குமார் கட்டீல், மத்திய அமைச்சர் பிரகலாத்ஜோஷி உடனிருந்தனர். இதே தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக சதீஷ்ஜார்கிஹோளி போட்டியிடுகிறார். அவர்களுடன் 33 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். பசவகல்யாண் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக மாலா நாராயணராவ், பாஜ வேட்பாளராக சரணபசப்பா, தேசியவாத காங்கிரஸ் வேட்பாளராக மூலே மாருதிராவ், சிவசேனா சார்பில் அன்குஷ் சுயேட்சையாக முன்னாள் அமைச்சர் மல்லிகார்ஜுன கூபே உள்பட 24 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர். மஸ்கி பேரவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக பசனகவுடா துருவியால், பாஜ வேட்பாளராக பிரதாப்கவுடா பாட்டீல் உள்பட 13 பேர் மனு மனுதாக்கல் செய்துள்ளனர். மூன்று தொகுதிகளிலும் மொத்தம் 70 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். மனுக்கள் மீது இன்று பரிசீலனை நடக்கிறது….

The post மூன்று தொகுதி இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் முடிவடைந்தது: மனுக்கள் மீது இன்று பரிசீலனை நடக்கிறது appeared first on Dinakaran.

Tags : Bengaluru ,Belagavi Lok Sabha ,Muski ,Basavakalyan ,
× RELATED தேசிய நெடுஞ்சாலையில் கழன்று ஓடிய கன்டெய்னர் லாரியின் முன்பக்க டயர்கள்