×

ரேஷனில் கோதுமை மாவு தராததால் பூச்சிக்கொல்லி மருந்து குடித்த சிறுமி: பசிக்காக கேட்டபோதும் இரக்கமின்மை

புதுடெல்லி: ரேஷன் கடையில் கோதுமை தர தர மறுத்ததால், பசியால் துடித்த சிறுமி பூச்சிக்கொல்லி மருந்து குடித்தார்.மத்தியப் பிரதேச மாநிலம் ரத்லம் மாவட்டத்தில் வசித்து வரும் சிறுமி சோபியா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் கடந்த ஆண்டின் கடைசி நாளான 31ம் தேதி ரேஷன் கடைக்கு சென்றுள்ளார்.  தான் மிகவும் பசியில்  இருப்பதாகவும், சிறிது கோதுமை தந்தால், அதில் ரொட்டி சுட்டு சாப்பிட்டுக் கொள்வதாகவும் கெஞ்சி உள்ளார். ஆனால், ஈவு இரக்கம் இல்லாத அந்த கடைக்காரர், சிறுமிக்கு கோதுமையை தர மறுத்துவிட்டார்.

கடும் பசியில் இருந்த சிறுமி, கையில் கிடைத்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துள்ளார். இதில் அவரது உடல்நிலை மோசமானது. இதையடுத்து, அக்கம், பக்கத்தினரால் அவர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு  அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து சிறுமியின் நிலைமை மோசமாகவே உள்ளது. இச்சம்பவம் குறித்து பத்திரிகைகள் வாயிலாக அறிந்த தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம், தானாக  முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Wheat , Because, flour, ration
× RELATED பயங்கரவாதம் சப்ளை செய்த பாகிஸ்தான்...