- மாதவரம் எஸ்.
- மாதவரம் தொகுதி கஞ்சகம்
- மாதவரம்
- எஸ்.ஸ்வதாரம் வில்லிவாக்கம்
- யூனியன் பாலாவேட்
- ஆலத்தூர்
- வல்லச்சேரி
- லகம்பாக்கம்
- பாண்டேஸ்வரம்
- கரலபககம்
புழல்: மாதவரம் தொகுதி திமுக வேட்பாளர் மாதவரம் எஸ்.சுதர்சனம் வில்லிவாக்கம் ஒன்றியம் பாலவேடு, ஆலத்தூர், வெள்ளச்சேரி, அரக்கம்பாக்கம், பாண்டேஸ்வரம், கரலபாக்கம் ஆகிய ஊராட்சிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், ‘இந்த பகுதியில் குடிநீர், சாலை, மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுத்துள்ளேன். விடுபட்ட பகுதிகளில் இந்த அடிப்படை வசதிகள் செய்து தரப்படும். இந்த பகுதியில் உள்ள இந்து ஆலயங்கள் புனரமைக்கப்படும். திமுக தேர்தல் அறிக்கைகள் நிறைவேற்றப்படும். நீட் தேர்வு ரத்து செய்யப்படும். அரசு பணிகளில் பத்தாண்டு தற்காலிகமாக பணியாற்றியவர்கள் நிரந்தரம் செய்யப்படுவார்கள். கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு குறைவாக நகை கடன் பெற்றிருந்தால் தள்ளுபடி செய்யப்படும். இதுபோன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகள், திமுக ஆட்சிக்கு வந்ததும் உடனடியாக செய்து தரப்படும்’ என்றார். பிரசாரத்தின்போது, திமுக ஒன்றிய செயலாளர் துரை வீரமணி, ஊராட்சி மன்ற தலைவர்கள் அரக்கம்பாக்கம் கோவிந்தராஜன், பாலவேடு பிரபாவதி சிவானந்தம், வெள்ளச்சேரி மதுரை முத்து, மாவட்ட கவுன்சிலர் சதீஷ்குமார், ஒன்றிய கவுன்சிலர் பிரபு, பாண்டேஸ்வரம் சுரேஷ், ஊராட்சி மன்ற தலைவர் ரேகா ராமு, மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் மஞ்சம்பாக்கம் காசிநாதன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பாலவேடு இளம்பரிதி, சத்தியமூர்த்தி, ரவிகுமார், ஸ்டாலின், பம்மதுகுளம் பத்மநாபன், பொன்.அண்ணாதுரை, கரலப்பாக்கம் ராஜேந்திரன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்….
The post அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படும்: மாதவரம் எஸ்.சுதர்சனம் வாக்குறுதி appeared first on Dinakaran.