×

மன்னார்குடி, கோட்டூர், கூத்தாநல்லூர் நீடாமங்கலம் பகுதியில் நெல் கொள்முதல் நிலையங்கள் விரைவில் திறக்கப்படுமா?

* விவசாயிகள் எதிர்பார்ப்பு

மன்னார்குடி ; தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் சார்பில் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களை விரைவில் திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி, கோட்டூர், கூத்தாநல்லூர், நீடாமங்கலம் உள்ளிட்ட ஒன்றியங்களில் உள்ள ஏராளமான கிராமங்களில் லட்சக்கணக்கான ஏக்கர்களில் பயிரிடப்பட்டிருந்த சம்பா நெல் சாகுபடி தற்போது அறுவடைக்கு தயாராக உள்ளது. பல பகுதிகளில் அறுவடை பணிகளில் விவசாயிகள் தீவிர மாக ஈடுபட்டு வருகின்றனர்.  

விவசாயிகளால்  அறுவடை செய்யப்படும் சம்பா நெல்லை  கொள்முதல்  செய்வதற்காக தமிழ்நாடு  நுகர் பொருள் வாணிப கழகத்தின் துணை மண்டல அலுவலகம் மன்னார்குடியில்  செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத் தின் மூலம்  கடந்த ஆண்டு சம்பா நெல்லை கொள்முதல் செய்வதற்காக இப் பகுதிகளில்  சுமார் 180க்கும் மேற்பட்ட இடங்களில் அரசின் நேரடி கொள்  முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன.

நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் சரக்குகளை கையாள்வதற்கு கடந்த மாதமே ஒப்பந்த புள்ளிகள் விடப்பட்டு விட்டன. ஆனால் கொள்முதல் நிலை யங்களை திறப்பதற்கு உத்தரவுகள் பிறப்பிக்கவில்லை. அதற்கான பணியாளர் கள் கூட தேர்வு செய்யப்படவில்லை. அதனால் இந்தாண்டு இப்பகுதிகளில்  நேரடி நெல் முதல் நிலையங்கள் இதுவரை திறக்கப் படவில்லை. நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்க விவசாயிகள் பலமுறை அதி காரிகளுக்கு  மனுக்கள் அளித்தும் பலனில்லை.

ஏற்கனவே கஜா புயலால் அனைத்தையும் இழந்த விவசாயிகள் அதிலிருந்து மீண்டு வராத சூழலில் நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்கப் படாத தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு விவசாயிகள் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர்.  இதுகுறித்து தமிழக காவிரி விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சேரன் குளம் செந்தில்குமார் கூறுகையில், காவிரி டெல்டாவில் காஜா புயல் தாக்குதலால் 60 சதவீதம்  மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ள  நிலையில் தற்போது சம்பா அறுவடைக்கு தயாராக இருந்தும், பல பகுதிகளில் அறுவடை செய்யப்பட்டும் நேரடி நெல் கொள்முதல் நிலை யங்கள் திறக்கப்படாததால்  விவசாயிகள் பரிதவிக்கிறார்கள்.

உதாரணமாக சென்ற ஆண்டு சம்பா கொள்முதலுக்கு திருவாரூர் மாவட்டத் தில் மட்டும்  400 நிலையங்கள் திறந்து கொள்முதல் செய்யப்பட்ட நிலையில் இவ்வாண்டு இதுவரையில் குறுவைக்கு திறக்கப்பட்ட 110 நிலையங்களை கணக்கு காட்டி அரசு  தப்பிக்க முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது. பண தட்டுப்பாட்டால் மறைமுகமாக கொள்முதல் செய்வதை தமிழக அரசு மறுத்து வருவதாகவும் தெரிய வருகிறது. எனவே முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இப்பிரச்னையில் உடன் தலையிட்டு கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு தடையின்றி சம்பா நெல்லை  விரைந்து கொள்முதல் செய் வதை உறுதிப்படுத்த வேண்டுகிறேன் என்றார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : paddy procurement stations ,Mannargudi ,Kotagur ,Neemamangalam ,Koothanallur , Mannargudi,Kotagur,Koothanallur, Neemamangalam,paddy procurement
× RELATED நடப்பு நவரை பருவத்தில் முதற்கட்டமாக 8...