×

சச்சினின் குரு அச்ரேகர் மரணம்

மாஸ்டர் பிளேஸ்டர் சச்சின் டெண்டுல்கரின் கிரிக்கெட் பயிற்சியாளர் ராமகாந்த் அச்ரேகர் (87 வயது), மும்பையில் நேற்று காலமானார்.  கடந்த சில நாட்களாகவே வயது மூப்பு காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த அச்ரேகருக்கு, தாதர் பகுதியில் உள்ள அவரது சிவாஜி  பார்க் இல்லத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சச்சின் மட்டுமல்லாது வினோத் காம்ப்ளி, பிரவீன் ஆம்ரே, சமீர் திகே, பல்விந்தர்  சிங் சாந்து உள்பட பல பிரபல வீரர்களும் அச்ரேகரிடம் பயிற்சி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சச்சின் சாதனை நாயகனாக  வலம் வந்ததற்கு இவரது பயிற்சியே முக்கிய காரணம். 1990ல் சிறந்த பயிற்சியாளருக்கான துரோணாச்சாரியார் விருதும், 2010ல் பத்ம  விருதும் பெற்றுள்ளார். அவரது மறைவுக்கு சச்சின், கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் உட்பட பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : death ,Achrekar ,Sachin , Achrekar's death ,death ,Sachin
× RELATED தொழிலாளி அடித்துக் கொலை: எஃப்.ஐ.ஆரில் மருத்துவமனையை சேர்க்க வலியுறுத்தல்