×

சொராபுதீன் வழக்கு விசாரணை: ராகுல் கேள்விக்கு ஜெட்லி பதில்

புதுடெல்லி: ‘சொராபுதீன் வழக்கு விசாரணையை கொன்றது யார் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியிருந்தால் அது பொருத்தமாக இருந்திருக்கும்’ என மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதாக பிடிப்பட்ட சொராபுதீன் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.  அவரது  மனைவி கவுசர், உதவியாளர் துல்சி பிரஜாபதி உள்ளிட்டோரும் கொல்லப்பட்டனர். 2005ம் ஆண்டு நிகழ்ந்த இந்த என்கவுன்டர் போலியானது என புகார் எழுந்தது. இந்த வழக்கில்  குற்றத்தை நிரூபிக்க அரசு தவறி விட்டதாகவும், ஆதாரங்கள் இல்லாததாலும்  குற்றம்சாட்டப்பட்ட 22 பேரையும் விடுதலை செய்து மும்பை சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டது.

இது தொடர்பாக நீதிமன்றத்தை சாடும் வகையில் கருத்து கூறிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ‘யாரும் கொல்லவில்லை.  சொராபுதீன் உள்ளிட்டோர் அவர்களாகவே இறந்து விட்டனர்’ என்று கூறினார். இந்த கருத்தை மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி விமர்சித்துள்ளார். இது தொடர்பாக தனது பேஸ்புக் பக்கத்தில் ஜெட்லி வெளியிட்டுள்ள பதிவில்,  ‘சொராபுதீன் வழக்கு விசாரணையை கொன்றவர் யார்?’ என அவர் கேள்வி எழுப்பியிருந்தால், அவருக்கு அதற்காக பதில் கிடைத்திருக்கும். ஆரம்பத்தில் இருந்தே விசாரணை ஆணையம் உண்மையை கண்டுபிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வழக்கை விசாரிக்கவில்ைல சில அரசியல் நபர்களை நோக்கி வழக்கை திசை திருப்ப வேண்டும் என்ற நோக்கத்திலேயே அவர்களின் விசாரணை இருந்தது’ என்று கூறியுள்ளார்.  


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Solapur ,case trial ,Jaitley ,Rahul , Solapur case, trial, Rahul, jetli
× RELATED ரஷ்ய அதிபர் புடினை போன்று ஜனநாயகத்தை...