×

பூந்தமல்லி நகராட்சியில் 1.38 கோடியில் நலத்திட்ட உதவி

பூந்தமல்லி: பூந்தமல்லி நகராட்சிக்குட்பட்ட 21 வார்டுகளில் குப்பை சேகரிக்கும் பணிக்காக தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகளை நகராட்சி நிர்வாகம் எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக 81 லட்சம் மதிப்பிலான குப்பை சேகரிக்கும் பேட்டரி வாகனங்கள், துப்புரவு பணிக்கான உபகரணங்களை துப்புரவு தொழிலாளர்களிடம் அமைச்சர்கள் க.பாண்டியராஜன், பெஞ்ஞமின் ஆகியோர் வழங்கினர். பூந்தமல்லி நகராட்சி அலுவலக வளாகத்தில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் டிட்டோ, பொறியாளர் முத்துக்குமார், சுகாதார ஆய்வாளர் வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதே போல பூந்தமல்லி வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 336 பேருக்கு தாலிக்கு தங்கம் திட்டத்தில் 2688 கிராம் தங்கமும், 1.38 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் வழங்கினர். பொன்னேரி எம்எல்ஏ. பலராமன், முன்னாள் எம்.எல்.ஏ. இரா.மணிமாறன், ஜாவித் அகமது, ரவிச்சந்திரன், தேவேந்திரன், கோபிநாத், ஹரிக்குமார், மாவட்ட சமூக நல அலுவலர் மீனா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலசுப்பிரமணியன், லட்சுமணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Poonamalle Municipality , 1.38 crores, assistance ,Poonamalle Municipality
× RELATED பூந்தமல்லி நகராட்சியில் குடிநீர்...