×

வளர்ச்சிப் பணிகள் என்ற பெயரில் ஊழல் செய்வதில் கவனம் செலுத்தும் கூட்டணி அரசு : கர்நாடகா அரசு மீது மோடி பாய்ச்சல்

பெங்களூரு : ‘‘கர்நாடகாவில் ஆளும் கூட்டணி அரசு வளர்ச்சிப் பணிகள் என்ற பெயரில்  ஊழல் செய்வதிலேயே கவனம் செலுத்தி வருகிறது’’ என பிரதமர் மோடி பகிரங்கமாக  குற்றம் சாட்டியுள்ளார். அடுத்தாண்டு நடக்கும் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க பாஜ முழுவீச்சில் தயாராகி வருகிறது. தொண்டர்களை ஊக்கப்படுத்தும் வகையில், ‘எனது தேர்தல் மையம், அனைவரின் தேர்தல் மையம்’ என்ற பெயரில் பல்வேறு மாநில தொண்டர்கள், கட்சி நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி காணொளி மூலம் சந்தித்து பேசி வருகிறார். அதன்படி, கர்நாடக பாஜ தொண்டர்கள், தலைவர்கள், நிர்வாகிகளுடன்  டெல்லியில் இருந்தபடி காணொளி மூலம் நேற்று அவர் பேசியதாவது: கர்நாடகாவில் விவசாய கடனை தள்ளுபடி செய்வதாக கிண்டல்  அடிக்கும் வகையில் முதல்வர் குமாரசாமி விவசாயிகளுக்கு உறுதி அளித்து  அறிவிப்பை வெளியிட்டார். ஊழலற்ற  ஆட்சியும், வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளும் அரசுதான் வேண்டும் என கர்நாடக மக்கள் நினைக்கின்றனர். ஆனால்,  கர்நாடகாவில் ஆட்சி செய்யும் மஜத-காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு,  வளர்ச்சிப் பணிகள் என்ற பெயரில் ஊழல்கள் செய்வதிலேயே குறியாக  இருக்கிறது.  

கர்நாடக அரசு மக்களுக்கு செய்ய வேண்டிய வளர்ச்சிப்  பணிகளை மேற்கொள்வதில் அதிக அக்கறை செலுத்தாதது குறித்து மாநில மக்களிடம்  பாஜ தொண்டர்கள் எடுத்துக்கூற வேண்டும். கர்நாடகாவில் கூட்டணி ஆட்சி  நடத்துபவர்கள் இசை நாற்காலி விளையாட்டை நடத்துவதில் கவனத்தை  செலுத்துகிறார்களே தவிர, மாநில மக்களின் வளர்ச்சிப் பணிகளில்  கவனம்  செலுத்தவில்லை. இவர்களின் இந்த கூத்தை பாஜ தொண்டர்கள் மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும். மேலும், கர்நாடகாவில் எத்தகைய  ஆட்சி நடத்தப்படுகிறது என்பதை கூட்டணி கட்சியில் உள்ளவர்களின் செயல்பாடுகளை  வைத்தே தெரிந்து கொள்ளலாம். விவசாயிகளின் ேகாரிக்கைக்கு கூட்டணி  ஆட்சி நடத்துபவர்கள் குரல் கொடுக்காததால், விவசாயிகள் மனம் உடைந்து தற்கொலை  செய்து கொள்கின்றனர். எனவே, விவசாயிகளுக்கு பயன் அளிக்கும் வகையில் கூட்டணி  அரசு வங்கிக்கடனை தள்ளுபடி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கூட்டணி  ஆட்சி நடத்துவோர் நாடு முழுவதும் சென்று வங்கிக்கடன் தள்ளுபடி செய்யவில்லை  என மத்திய அரசு மீது குற்றம் சாட்டுகின்றனர். ஆனால், கடன் தொல்லையால்  விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதை இவர்கள் ஏற்றுக்கொள்வார்களா? இவ்வாறு அவர் பேசினார். 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Coalition ,government ,Karnataka ,Modi , Coalition to focus ,corruption ,development activities
× RELATED இட ஒதுக்கீட்டை மேம்படுத்தும்...