×

சபரிமலையில் இன்று மண்டல பூஜை ஆரன்முளா தங்க அங்கி ஊர்வலம் பக்தர்களுக்கு திடீர் கட்டுப்பாடு

திருவனந்தபுரம்: சபரிமலையில் தங்க அங்கி ஊர்வலத்தையொட்டி பக்தர்களுக்கு திடீர் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.சபரிமலையில் பிரசித்திப் ெபற்ற மண்டல பூஜை இன்று நடைபெறுகிறது. இதையொட்டி சுவாமி ஐயப்பன் விக்ரகத்தில் அணிவிக்கப்படும் 451 பவுன் எடையுள்ள தங்க அங்கி ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் இருந்து கடந்த 23ம் தேதி ஊர்வலமாக புறப்பட்டது.இந்த தங்க அங்கி நேற்று பிற்பகல் பம்பையை அடைந்தது. பின்னர் பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு புறப்பட்ட தங்க அங்கி ஊர்வலத்திற்கு சரங்குத்தி பகுதியில் வைத்து தேவசம் போர்டு சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. மாலை 6.30 மணியளவில் சுவாமி ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதனை காண சபரிமலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

இன்று பகல் 12 மணியளவில் பிரசித்திப் ெபற்ற மண்டல பூஜை, தந்திரி கண்டரர் ராஜீவரர் முன்னிலையில் நடைபெறுகிறது. தொடர்ந்து இரவு 10 மணியளவில் கோயில் நடை சாத்தப்படும். இன்றுடன் 41 நாள் நீண்ட இவ்வருட மண்டல காலம் நிறைவடையும். 28, 29 ஆகிய தேதிகளில் கோயில் நடை சாத்தப்பட்டிருக்கும். மீண்டும் மகர விளக்கு பூஜைகளுக்காக வரும் 30ம் தேதி மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்படும்.இதனிடையே தங்க அங்கி ஊர்வலத்தையடுத்து பக்தர்களுக்கு சில கட்டுபாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. தங்க அங்கி பம்பையில் இருந்து சன்னிதானம் புறப்பட்ட சமயத்தில், பக்தர்கள் ஆங்காங்கே தடுத்து நிறுத்தப்பட்டனர். மதியம் 1.30 மணிக்கு கோயில் நடை சாத்தப்பட்ட பின்னர் பக்தர்கள் 18ம் படி ஏற அனுமதிக்கப்படவில்லை. மாலை சுவாமிக்கு தங்க அங்கி அணிவித்து தீபாராதனை நடைபெற்றபோது பக்தர்கள் மீண்டும் 18ம் படி ஏற அனுமதிக்கப்பட்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Zone ,Pooja Today ,rally ,Sabarimala Aranmula Golden Ganga ,devotees , Zone Pooja,Sabarimala Aranmula, Golden Ganga ,rally is a sudden c
× RELATED சந்தேக மரண வழக்காக ஜெயக்குமார் வழக்கு...