×

கனடாவின் இயல் விருது பெறும் எழுத்தாளர் இமையத்திற்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: கனடா நாட்டின் தமிழ்த் தோட்டம் சார்பில் இயல் விருது பெறும் எழுத்தாளர் இமையத்திற்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இதுகுறித்து திமுக தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வாழ்த்துச் செய்தி வருமாறு:
பெரியார், அம்பேத்கர் வகுத்த சமூக நீதிக் கண்ணோட்டத்துடன் சாதியக் கொடுமைகளுக்கு எதிராகவும் மனிதநேய மாண்பினை வலியுறுத்தியும் தொடர்ச்சியாகப் பல படைப்புகளை உருவாக்கி வரும் திமுக எழுத்தாளர்  கலைஞரின் உடன்பிறப்பு இமையத்திற்கு, கனடா தமிழ்த்தோட்டம், இயல் விருது வழங்கிச் சிறப்பு செய்வது நம் அனைவருக்கும் மகிழ்ச்சி தரும் செய்தியாகும்.

ஏற்கனவே கலைஞரால் தமிழக அரசின் விருதினைப் பெற்றவர் இவர். இத்தகைய விருதுகள் அவருடைய சிறப்பான படைப்பாற்றலுக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்து, மேலும் பல புதினங்கள் சிறுகதைகள் உள்ளிட்ட இலக்கிய  வடிவங்களைத் தமிழன்னைக்கு அணிகலனாகச் சூட்டிடச் செய்யும். கனடாவின் இயல் விருது பெறும் எழுத்தாளர் இமையத்திற்கு இதயம் கனிந்த  வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.




பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Canada ,MK Stallion , Canada's, Natural Award, Congratulating, MK Stalin
× RELATED குடும்ப அட்டைதாரர்களுக்கு துவரம்...