×

ரபேல் பேரம், மேகதாது, சிறப்பு அந்தஸ்து அமளிகளுக்கு இடையே நாளை மீண்டும் கூடும் பார்லி கூட்டம்

புதுடெல்லி: ரபேல் விமான பேரம், மேகதாது, ஆந்திர மாநில சிறப்பு அந்தஸ்து போன்ற விவகாரங்கள் தொடர்பாக அமளிகளுடன் நடந்துவந்த நாடாளுமன்ற கூட்டத்ெதாடர், கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு பின்னர் நாளை மீண்டும் கூடுகிறது. அதன்படி, முத்தலாக் அவசர சட்டத்துக்கு மாற்றாக விவாதம் நடத்த காங்கிரஸ் கட்சி சம்மதம் தெரிவித்ததால், ஆளுங்கட்சி விவாதத்துக்கு ஆயத்தமாகி வருகிறது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 11ம் தேதி தொடங்கி, வரும் ஜனவரி 8ம் தேதி வரை நடைபெறுகிறது. எதிர்க்கட்சிகள் ரபேல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை முன்வைத்து அமளியில் ஈடுபட்டு வருவதால், அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து நாடாளுமன்ற வளாகத்திலும், தமிழக எம்பிக்கள் மேகதாது குறித்தும், ஆந்திர எம்பிக்கள் மாநில சிறப்பு அந்தஸ்து கோரியும், மேலும் சில மாநில எம்பிக்கள் அந்தந்த மாநில பிரச்னைகள் தொடர்பாக பல்வேறு கோரிக்கைகள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 21ம் தேதி மக்களவையில் மேகதாது விவகாரம் தொடர்பாக அதிமுக உறுப்பினர்கள் முழக்கங்கள் எழுப்பினர். இதேபோல் தெலுங்குதேசம் கட்சி, ஆம் ஆத்மி கட்சி உள்ளிட்ட பிற கட்சி எம்பிக்களும் தங்கள் மாநிலம் சார்ந்த  கோரிக்கைகளை முன்வைத்து அமளியில் ஈடுபட்டனர். இதனால் மக்களவை பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர், 12 மணிக்கு மேல் அவை கூடியபோதும் அதிமுக, தெலுங்குதேசம் கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் அவையின் மையப்பகுதிக்கு சென்று முழக்கமிட்டனர். இந்த அமளிக்கு மத்தியிலும் ‘ஜீரோ ஹவர்’ பணிகள் நடைபெற்றன. இதில், 5 எம்பிக்கள் மட்டுமே பங்கேற்று பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பேசினர். இதுதுவிர பொது கணக்கு குழு மற்றும் இரண்டு நிலைக் குழு அறிக்கைகளும் தாக்கல் செய்யப்பட்டன.

 ஜீரோ ஹவர் முடிந்த பின்னர் நாடாளுன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் அர்ஜூன் ராம் மெக்வால் பேசினார். ‘கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 24 மற்றும் 26 ஆகிய நாட்களும் விடுமுறை அறிவிக்க வேண்டும்’ என பெரும்பாலான எம்பிக்கள் கோரிக்கை விடுத்துள்ளதால், சபாநாயகர் சுமித்ரா மகாஜன், 24 மற்றும் 26 ஆகிய தேதிகளில் மாநிலங்களவைக்கு விடுமுறை விடப்படுவதாக அறிவித்தார். வார இறுதி நாட்கள் மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான விடுமுறை நாட்கள் என தொடர்ந்து 5 நாட்கள் மக்களவை செயல்படாத நிலையில், நாளை (டிச. 27) நாடாளுமன்றம் மீண்டும் கூடுகிறது. முன்னதாக, எம்பிக்களின் ெதாடர் அமளிக்கு இடையே, மக்களவையில் முத்தலாக் நடைமுறைக்கு தடை விதிக்கும் புதிய மசோதா விவாதத்துக்கு எடுத்துக்  கொள்ளப்பட்டது.

அப்போது குறுக்கிட்டுப் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர்  மல்லிகார்ஜூன கார்கே, ‘‘இந்த மசோதா மீதான விவாதத்தை, வரும் 27ம் தேதி  நடத்தலாம்’’ என்று தெரிவித்ததால், மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், ‘‘கார்கே வெளிப்படையாக வாக்குறுதி அளித்து விட்டதால், 27ம் தேதியே விவாதம் நடத்தலாம்’’ என்று தெரிவித்தார். முஸ்லிம் சமூகத்தில் உடனடியாக மூன்று முறை தலாக் கூறி மனைவியை விவாகரத்து செய்யும் நடைமுறைக்கு தடை விதிக்கும், முஸ்லிம் பெண்கள் திருமண உரிமை பாதுகாப்புச் சட்ட மசோதா, மக்களவையில் ஏற்கெனவே நிறைவேற்றப்பட்டு விட்டது. ஆனால், மாநிலங்களவையில் நிறைவேற்றப்படவில்லை. இதையடுத்து, முத்தலாக் நடைமுறைக்கு தடை விதிக்கும் அவசர சட்டத்தை மத்திய அரசு கடந்த செப்டம்பரில் கொண்டு வந்ததுமு. இதற்கிடையே, நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடங்கினால், 6 வாரங்களில் அவசர சட்டத்துக்கு மாற்றான மசோதா நிறைவேற்றப்பட வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. அதனால், நாளை நடக்கும் முத்தலாக் மசோதா மீதான விவாதம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : meeting ,Barley ,Rafael Barem ,Magadtha , Rafael Baram, Megatathu, special status, sorrow, barley meeting
× RELATED காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 95-வது...