×

கிராம மக்கள் சூழ்ந்து வாக்குவாதம் கனிம ஆய்வுக்கு வந்த அதிகாரிகளை முற்றுகை

மேலூர் :மேலூர் அருகே கனிம ஆய்விற்கு வந்த அதிகாரிகளை முற்றுகையிட்டு கிராம மக்கள், வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அதிகாரிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். மதுரை மாவட்டம், மேலூர் அருகே கம்பூர் பகுதிக்கு அரசு ஜீப்பில் நேற்று வந்த 5 பேர், அப்பகுதியில் உள்ள பட்டணநல்லி கண்மாய் கரையில் பாறைகளை சம்மட்டியால் உடைத்தனர். அப்போது அங்கு வந்த இளைஞர்கள் எதற்காக பாறையை உடைக்கிறீர்கள் என கேள்வி கேட்டு முற்றுகையிட்டதால், இருதரப்பிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

alignment=


தகவலறிந்து சம்பவ இடத்திற்கு கொட்டாம்பட்டி போலீசார் வந்து விசாரித்தனர். விசாரணையில், ‘ஜியாலஜிகல் சர்வே ஆப் இந்தியா’ அமைப்பில் இருந்து மத்தியஅரசின் புவியியல் அதிகாரிகள் பாபுஜி தலைமையில் வந்து அங்கு ‘டங்ஸ்டன்’ கனிமம் குறித்து ஆய்வு செய்வது தெரிய வந்தது. புவியியலாளர்கள், போலீசாரிடம் கிராமத்தினர் மீது புகார் கூறினர். கிராம மக்கள், ஆய்விற்கு வந்த புவியியலாளர்கள் தரக்குறைவாக பேசியதால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.

 கிராமத்தினர் அனுமதியின்றி எந்த ஆய்வையும் மேற்கொள்ள கூடாது என்றும், எந்த கனிம வளங்களையும் சுரண்ட அனுமதிக்க முடியாது என்றும் கிராம இளைஞர்கள் கூறினர். கிராமத்தினர் மீது புகார் அளிக்க கொட்டாம்பட்டி ஸ்டேஷனுக்கு வருவதாக கூறிய அதிகாரிகள் எந்த புகாரையும் அளிக்காமல் சென்று விட்டனர். இதேபோல் கடந்த மாதம் அரிட்டாபட்டியில் ஆய்விற்கு வந்த அதிகாரிகளை கிராம மக்கள் பிடித்து வைத்து போராட்டம் நடத்த, போலீசார் தலையிட்டு அவர்களை மீட்ட சம்பவம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : miners , madurai,Mineral exploration ,village People,Protest
× RELATED தைவானில் பயங்கர நிலநடுக்கம்; 9 பேர் பலி;...