×

சாலை விளிம்பில் தொங்கிய பஸ் தவிப்பில் 30 பயணிகள்

ஜம்மு: ஜம்முவில் பனி காரணமாக சாலையில் இருந்து விலகி சென்ற பஸ் அந்தரத்தில் தொங்கியது. அதிர்ஷ்டவசமாக அதில் இருந்த 30 பயணிகள் உயிர்தப்பினார்கள். ஜம்மு காஷ்மீரின் கிஸ்த்வார் மாவட்டத்தில் இருந்து ஜம்மு நோக்கி பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. இதில் சுமார் 30 பேர் பயணம் செய்தனர்.

தோடா மாவட்டத்தின் மலைச்சாலையில் பஸ் வந்தபோது சாலை முழுவதும்  படர்ந்திருந்த பனியின் காரணமாக டயர்கள் வழுக்கி சென்றன. இதனால் பஸ் சாலை ஓரத்தில் உள்ள விளிம்பில் கைப்பிடி சுவர்களுக்கு இடையே சிக்கியபடி தொங்கியது. கண்ணிமைக்கும் நேரத்தில் பஸ் பள்ளத்தாக்கில் விழுந்து  விடும் அபாயம் நிலவியதால் அதில் இருந்த பயணிகள் அலறி கூச்சலிட்டனர். ஆனால் அதிர்ஷ்டவசமாக பஸ் பள்ளத்தாக்கில் விழாமல் சிறிது நேரம் அந்தரத்தில் தொங்கியபடி நின்றது. இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் மற்றும் கிராம மக்கள் விரைந்து வந்து பஸ்சில் சிக்கியவர்களை மீட்டனர். இதனால் 30  பயணிகளும் உயிர் தப்பினார்கள்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : passengers ,road , Bus, road 30 passengers , sidewalk
× RELATED சேலம் – கொச்சி விமானம் திடீர் ரத்து: 50...