×

திருவள்ளூர் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை : தலைமையாசியர் மீது போக்சோ வழக்கு!

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசியர் தலைமறைவாகியுள்ள நிலையில், அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. ஊத்துக்கோட்டை அருகே உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். அந்த பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வரும் பாஸ்கர் என்பவர் அங்கு பயின்று வரும் மாணவிகளிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் அங்கு பயின்று வந்த 9ம் வகுப்பு மாணவி ஒருவர் கழிவறைக்கு சென்ற போது, அவரை பின்தொடர்ந்து சென்ற பாஸ்கர், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து அந்த மாணவி அவரது பெற்றோரிடம் தெரிவித்ததால், அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக இதுகுறித்து குழந்தைகள் நல காப்பகம் மற்றும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இதனையடுத்து மாவட்ட குழந்தைகள் நல காப்பக அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் பள்ளிக்கு சென்று அங்கு பயின்று வரும் பிற மாணவிகளிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் தலைமையாசிரியர் பாஸ்கர், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்து வந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஊத்துக்கோட்டை மகளிர் காவல்நிலையத்தில் பாஸ்கர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பாஸ்கர் தலைமறைவாகியுள்ளதால் அவரை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. எனவே தனிப்படை போலீசார் அவரை தேடி வருகின்றனர். இதனிடையே மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், பாஸ்கரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sexual harassment ,school ,Thiruvallur ,headmaster ,Posco , Tiruvallur, student, sexual harassment, pokso law, dismissal
× RELATED டிஜெஎஸ் பப்ளிக் சிபிஎஸ்இ பள்ளியில்...