×

மூத்த தமிழறிஞர் க.ப.அறவாணன் உடல்நலக்குறைவால் மரணம்: அரசியல் தலைவர்கள், தமிழ் அறிஞர்கள் அஞ்சலி

சென்னை: மூத்த தமிழறிஞர் க.ப.அறவாணன் இன்று காலை மரணமடைந்தார். மறைந்த க.ப.அறவாணன் உடலுக்கு திங்களன்று இறுதி நிகழ்ச்சி நடைபெறுகிறது. சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அவரது உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 78. தஞ்சை மாவட்டம் கடலங்குடி என்ற ஊரில் அவர் பிறந்தார். வெள்ளை உடை, தொப்பி என வசீகரிக்கும் தோற்றத்தில் நிகழ்ச்சிகளில் பங்கேற்று அனைவரையும் கவர்ந்தவர். நீண்டகாலமாக தமிழர் வரலாறு, சமூகவியல், மானுடவியல் தமிழ் இலக்கியம் என பல்வேறு தளங்களில் உரைகள் வழங்கியும் நூலகள் எழுதியும் வந்தார்.

பல்வேறு தலைப்புகளில் 112 நூல்களை எழுதி இருக்கிறார். நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தராகவும் இவர் பணியாற்றி உள்ளார். மேலும் பல பல்கலைக்கழகங்களின் பாடத்திட்ட குழு உறுப்பினராகவும் இவர் இருந்துள்ளார். க.ப.அறவாணன் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திராவிடர் கழக தலைவர் கு.வீரமணி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன், பாரதிய ஜனதா தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : KB Aravana ,scholars ,Tamil , Senior Tamil scholar,KP Aravanan,dies,Political leaders,Tamil scholars,
× RELATED உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில்...