×

காவிரியும் முல்லைப்பெரியாறும் இரட்டை தலைவலி: தமிழகத்தை தொடர்ந்து பதற்றத்தில் வைப்பதா?: கேரளா, கர்நாடகா அரசுகள் போக்கு மாற வேண்டும்

புதுடெல்லி: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரளமும், காவிரி நதிநீர் பங்கீட்டில் கர்நாடகமும் தமிழகத்திற்கு தொடர்ந்து இடையூறு செய்து வருகின்றன. பல ஆண்டுகளாக இந்த பிரச்னைகளில் தமிழகத்தில்  பதற்றத்தை ஏற்படுத்துவதிலேயே இந்த இரு மாநில அரசியல் தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வகையில், கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் டி.கே. சிவகுமாரும், மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை இணை  அமைச்சர் மகேஷ் சர்மாவும் சமீபத்தல் கூறிய கருத்துகள் புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளன. நாடாளுமன்றத்தில் கொந்தளிப்பான சூழலையும் ஏற்படுத்தியுள்ளது. இரு மாநில எம்பி.க்கள் தத்தம் மாநில உரிமையை நிலைநாட்ட  போராட்டம் நடத்தி வருகின்றனர்.

* 2011ல் கேரள உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொது நலன் வழக்கில், ‘முல்லைப் பெரியாறு அணை நிரம்பி உடைந்தால் பெரும் பாதிப்பு ஏற்படும். எனவே, பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க அரசுக்கு உத்தரவிட  வேண்டும்’ என்று கோரப்பட்டது. இந்த வழக்கில் கேரள அரசு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், ‘அணையின் நீர்மட்டம் 152 அடியாக இருந்தால், 10.5  டிஎம்சி தண்ணீர் மட்டுமே இருக்கும். தற்போது நீர்மட்டம் 136 அடியாக  உள்ளதால் 6 டிஎம்சி நீர் மட்டுமே உள்ளது. மேலும், அணை செப்பனிடப்பட்டு மிகவும் வலிமையாகவே உள்ளதால் அணையிலிருந்து வெளியேறும் நீர் இடுக்கி அணையை பாதுகாப்பாக சென்றடையும். எனவே, யாரும் அச்சப்படத்  தேவையில்லை’ என்று கூறப்பட்டது.

* இந்த அணையை 1980 - 2014 வரையில் 4 நிபுணர் குழுக்கள் ஆய்வு செய்து, வலுவாக இருப்பதாக உறுதி அளித்துள்ளன.
* இந்த அணைப்பகுதி சட்டப்பூர்வமாக தமிழகத்திற்கு எழுதி தரப்பட்ட சொத்துரிமை.
* தமிழகத்திற்கு உரிமையுள்ள சொத்தில் புதிய அணை கட்ட வேண்டும் என்றால் அதற்கு தமிழகத்தின் முழுசம்மதத்தை பெற வேண்டும். இதை மத்திய அரசும் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை. எல்லாம் அரசியல் ஆதாயம்  காரணமாக நடக்கின்றன.
* ஒரு அணை செயல்பாட்டில் உள்ளபோது, அதன் அருகில் மற்றொரு அணை கட்டுவது சாத்தியமல்ல. இது மத்திய அரசால் விவாதிக்கப்பட்டு ஏற்கனவே திட்டம் கைவிடப்பட்டது. இதை கேரளமும் நன்கு அறியும்.
* தங்கள் மாநிலத்தில் சுற்றுலா வருமானத்தை அதிகரிப்பதற்காகவும், வனப் பகுதிகளில் கட்டப்பட்டுள்ள ரிசார்ட்களில் தண்ணீர் தேங்காமல் இருப்பதற்காகவும் முல்லைப் பெரியாறு அணையை உடைத்து தமிழக விவசாயிகள்,  மக்களின் வாழ்வாதாரத்தை கேரளா முடக்க முயற்சிப்பது  நியாயமா? என்பதே தமிழர்களின் ஒரே கேள்வியாக உள்ளது.

பன்மாநில நதி நீர் பங்கீட்டில்...
ஹெல்சிங்கி கோட்பாடு: கடந்த 1966ம் ஆண்டு பின்லாந்தில் உள்ள ஹெல்சிங்கி என்ற இடத்தில் உள்ள பன்னாட்டு சட்ட சங–்கத்தால் வரையறுக்கப்பட்ட நெறிகளின்படி, பன்னாட்டு / பன்மாநில நதிகளின நீரை கீழே உள்ள  நாடுகளின்/ மாநிலங்களின் பாரம்பரிய உரிமையும், அளவும் குறையாதபடி தங்களுக்குள் சரியாகப் பங்கிட்டு கொள்ள வேண்டும். நம் நாட்டில் பக்ரா - பியாஸ் நதி நீர் தகராறும், கங்கை - பாரக்கா நதி நீர் தகராறும் ஆப்பிரிக்காவில்  நைல் நதி நீர் பங்கீடும் சரியாக பிரச்னை இல்லாமல் தீர்க்கப்பட்டு நடைமுறையில் கடைப்பிடிக்கப்படுகிறது. அப்படி இருக்கையில், கர்நாடகா மட்டும் தெரிந்தே அடாவடியாக மீறுகிறது என்றால் என்ன சொல்வது?அடுத்த மாநிலத்தின் நலன்களை பெரிதும் பாதிக்கும் செயலில் ஈடுபடுவதும் எந்த காலத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாதது. அதில் எந்த நியாயமும் இல்லை.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kevrey ,Ravichandra ,Tamilnad ,governments ,Kerala ,Karnataka , Cauvery, Mullaperiyar, double head, Tamil Nadu, Kerala and Karnataka governments
× RELATED தெலங்கானாவில் போலி சிபிஐ அதிகாரியை...