×

மேலூர் டாக்டர் வீட்டு கொள்ளை வழக்கில் தலைமறைவான போலீஸ் மதுரை நீதிமன்றத்தில் சரண்

மேலூர்: மேலூர் டாக்டர் வீட்டு கொள்ளை வழக்கில் தலைமறைவாக இருந்த போலீஸ் நேற்று மதுரை நீதிமன்றத்தில் சரணடைந்தார். மதுரை மாவட்டம், மேலூர் காந்திஜிநகர் ரோட்டில் வசித்து வந்த டாக்டர் வீட்டில், துப்பாக்கி முனையில் 6 பேர் கொண்ட முகமூடி கும்பல் பல லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்றது. இவ்வழக்கில் 4 தனிப்படை போலீசார்  குருட்டு கணபதி (37), சஸ்பெண்ட் போலீஸ் ராதாகிருஷ்ணன் உள்பட 4 பேரை கைது செய்தனர்.

இவர்கள் அளித்த தகவலின்பேரில், கும்பலுக்கு துப்பாக்கிகளை சப்ளை செய்த கவர்னர் மாளிகை பாதுகாப்பு காவலரான திருமங்கலம்  குமார் (33) உட்பட 22 பேர் கைதாயினர். ₹60.60 லட்சம் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. இவ்வழக்கில் மதுரை பொதும்புவை சேர்ந்த சரவணக்குமார் (35) தேடப்பட்டு வந்தார். திருப்பூர் நகர் ஆயுதப்படை பிரிவில் போலீசாக  பணியாற்றி வந்த இவர் நேற்று மதுரை ஜேஎம் 4 மாஜிஸ்திரேட் கவுதமன் முன்னிலையில் சரணடைந்தார். இவரை சிறையில் அடைத்து இன்று மேலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இச்சம்பவத்தில்  இதுவரை 3 போலீசார் உட்பட 23 பேர் கைதாகி உள்ளனர்.

சொத்து குவித்த போலீஸ்
கைதான கவர்னர் பாதுகாப்பு போலீஸ்காரர் குமார், மதுரை திருமங்கலம் பகுதியில் சமீபகாலமாக பல லட்சம் மதிப்பிலான சொத்துகளை வாங்கி குவித்திருப்பது தெரிய வந்துள்ளது. ₹30 லட்சத்தில் புதிய வீடு, பல்வேறு காலி இடங்கள் வாங்கி குவித்துள்ளார்.





பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Melur Doctor ,housewife suicide ,Madurai , Melur Doctor , Outdated, police, Saran,Madurai court
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை