×

கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 108 கோடி : தொழிலதிபர்கள், பொதுமக்கள் வழங்கினர்

சென்னை: கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ தொழிலதிபர்கள் மற்றும் பொதுமக்கள் முதலமைச்சரின்  பொது நிவாரண நிதிக்கு இதுவரை 108 கோடி வழங்கியுள்ளனர். கஜா புயலால் வாழ்வாதாரங்களை இழந்த மக்களுக்கு உதவிடவும், நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளவும், முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடைகள் வழங்குமாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் 19ம் தேதி பத்திரிகைகளின் வாயிலாக வேண்டுகோள் விடுத்தார். இதை ஏற்று, தமிழ்நாட்டில் கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ஏற்கனவே 88 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, கடந்த 13ம் தேதி முதல்வரிடம் நிதி உதவி வழங்கியவர்களின் விவரம்:

போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தமிழ்நாடு அரசின் 8 போக்குவரத்து கழகங்கள் மற்றும் சாலை  போக்குவரத்து நிறுவனங்களின் பணியாளர்களின் ஒருநாள் சம்பள தொகையான 13  கோடியே 15 லட்சத்து 23 ஆயிரத்து 395 ரூபாய், எல் அண்ட் டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமை செயல் அலுவலர் எஸ்.என்.சுப்ரமணியன் 1 கோடியே 50 லட்சம்,  அப்போலோ மருத்துவமனைகளின் செயல் துணைத் தலைவர்  டாக்டர் ப்ரீதா ரெட்டி,  அவரது கணவர் விஜயகுமார் ரெட்டி மற்றும் மகன் கார்த்திக் ரெட்டி  ஆகியோர் 1 கோடி, சுப்ரீம் கோர்ட் பார்  அசோசியேஷன் செயலாளர் விக்ரந்த் யாதவ் மற்றும் அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆகியோர் சுப்ரீம் கோர்ட் பார் அசோசியேஷன் சார்பில் 74  லட்சத்து 62 ஆயிரத்து 221 ரூபாய்க்கான காசோலை மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி வழங்கிய 25 ஆயிரம், ஆர்.எம்.கே. குழும கல்வி நிறுவனங்களின் நிறுவன தலைவர் ஆர்.எஸ்.முனிரத்தினம் 50 லட்சம், தமிழ்நாடு நிலஅளவை அலுவலர்கள் ஒன்றிப்பு மாநில மையத்தின் தலைவர் காயாம்பு, பொதுச்செயலாளர் ராஜா மற்றும் நிர்வாகிகள் 11 லட்சம், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில தலைவர் மணிமேகலை 10 லட்சத்துக்கான காசோலை வழங்கினர். அத்துடன், பொதுமக்கள் நேரடியாகவும், ஆன்-லைன் மூலமாகவும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கிய நன்கொடைகளை சேர்த்து, இதுவரை 108 கோடியே 34 லட்சத்து 99 ஆயிரத்து 624 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : victims ,Industrialists ,Public ,Gaza Storm , 108 crore, Chief Minister Relief Fund,victims of Gaza Storm, Industrialists and Public
× RELATED கென்யாவை புரட்டிப்போட்ட கனமழை!:...