×

டெல்லியில் சில்லறை வர்த்தகர்கள் ஆர்ப்பாட்டம்: ஜி.எஸ்.டி வரிவிதிப்பை எளிமைப்படுத்த கோரிக்கை

புதுடெல்லி: ஆன்லைன் வர்த்தகத்தை முறைப்படுத்துதல் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் சில்லறை வணிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். டெல்லி கரோல் பாக்கில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நாடு முழுவதும் இருந்து வந்திருந்த சில்லறை வர்த்தகர்கள் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். அதில் தமிழகத்தை சேர்ந்த 300கும் மேற்பட்ட சில்லறை வர்த்தகர்கள் கலந்து கொண்டு 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகள் சில்லறை வர்த்தகர்களை ஒடுக்கும் வகையில் இருப்பதாக அவர்கள் குற்றம் சாட்டினர். தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற தவறினால் நாடாளுமன்ற தேத்தலுக்கு முன் நாடு தழுவிய அளவில் மிக பெரிய போராட்டத்தை முன்னெடுக்கப் போவதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு உறுப்பினர் விக்ரம் ராஜா எச்சரித்தார்.

மேலும் அரசிடம் சம்பளம் வாங்காமல் பல லட்சம் கொடிகளை அரசுக்கு வருவாய் ஈட்டித் தருகின்ற வணிகர்களுக்கு அரசு ஓய்வூதிய திட்டம், அரசு காப்பீட்டு திட்டம் போன்ற அனைத்து திட்டங்களிலும் வியாபாரிகளுக்கு முன்னுரிமை வழங்கவேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டம் நடத்துவதாக கூறினார். குறிப்பாக பிளாஸ்டிக், பட்டாசு போன்ற தொழிற்சாலைகள் நலிந்து போகாமல் அவர்களையும் பாதுகாக்க வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கம் சார்பில் வலியுறுத்தப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Retailers ,Delhi , Retailers, Demonstration, Delhi, GST
× RELATED மாணவர்களுக்கு புத்தகம் வழங்க தவறிய...