×

பெய்ட்டி புயல் கரையை கடந்ததை தொடர்ந்து ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 8 நாட்களுக்கு பிறகு மீன்பிடிக்க அனுமதி

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் பகுதி விசைப்படகு மீனவர்கள் 8 நாட்களுக்கு பிறகு கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை வலுப்பெற்று பெய்ட்டி புயலாக மாறியது. இதனால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல மீன்வளத்துறை தடைவிதித்தது. பெய்ட்டி புயல் காரணமாக டிச.11-ம் தேதி முதல் மீன்பிடிக்க அரசு தடை விதித்திருந்தது. இதனால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லாமல் இருந்தனர்.

இந்நிலையில் பெய்ட்டி புயல் நேற்று ஆந்திராவில் கரையை கடந்ததை தொடர்ந்து மீனவர்களுக்கு மீண்டும் கடலுக்குச் செல்ல இன்று அனுமதி அளிக்கப்பட்டது. இதனையடுத்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள்  கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். எட்டு நாட்களுக்குப் பிறகு ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று மீண்டும் கடலுக்கு சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : storm ,fishermen ,area ,Baiti ,Rameshwaram , Rameswaram,fishermen,allowed,fishing,peyti storm,crossed,border.
× RELATED யாழ்ப்பாணம் நீதிமன்றத்தால் தண்டனை...