×

கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் தகவல் கள் இறக்க அனுமதிக்காவிட்டால் ஜன.21ல் அசுவமேத யாகம்

ஈரோடு : கோவையில் இருந்து ஈரோடு வந்த கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி நிருபர்களிடம்  கூறியதாவது: கள் இறக்குவதும், பருகுவதும் அரசியலமைப்பு சட்டம் மக்களுக்கு  கொடுத்திருக்கும் உணவு தேடும் உரிமை. இது உலகளாவிய நடைமுறை. எனவே கள்ளுக்கான தடையை நீக்க வேண்டும். நிபந்தனைகள்  இல்லாமல் நீரா இறக்கி உள்நாட்டிலும், உலக அளவிலும் அரசின் தலையீடும்,  குறுக்கீடும் இல்லாமல் சந்தைப்படுத்தினால் மட்டுமே திட்டம் முழுமையாக  வெற்றி பெறும். எங்களின் கோரிக்கையை  வலியுறுத்தி கோவையில் இருந்து சென்னை வரை பரப்புரை பயணம் மேற்கொள்ளப்பட்டு  வருகிறது. எங்களின் கோரிக்கைகள் தொடர்பாக நாளை தமிழக  முதல்வரை சந்தித்து வலியுறுத்தப்படவுள்ளது. கோரிக்கையை ஏற்கவில்லையென்றால்  அடுத்தகட்டமாக ஜனவரி 21ம்தேதி அசுவமேதயாகம் நடத்துவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : activation coordinator , Activation coordinator,does not allow ,information to die,
× RELATED வங்க கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி...