×

கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட தயாராகும் ஊட்டி

ஊட்டி: ஊட்டி நகரம் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட தயாராகி வருகிறது. கடைகளில் கிறிஸ்துமஸ் மரங்கள் மற்றும் ஸ்டார்கள் விற்பனை சூடுபிடித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் அனைத்து சமுதாய மக்களும் வாழ்ந்து வருகின்றனர். ஆங்கிலேயர் காலம் முதலே இங்கு கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நூற்றாண்டுகளை கடந்த ஸ்டீபன் சர்ச், தாமஸ் சர்ச் போன்ற சர்ச்சுகள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு கொண்டாடுவது வழக்கம். அதே போல் கிறிஸ்துமஸ் தாத்தா ஊர்வலம் கடந்த பல ஆண்டுகளாக ஊட்டியில் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஊட்டியில் உள்ள பெரும்பாலான சர்ச்சுகளில் தற்போது கிறிஸ்துமஸ் கேரல் நிகழ்ச்சிகள் துவங்கி நடந்து வருகிறது. சர்ச்சுகள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு 2 வாரங்களே உள்ள நிலையில், நகரில் உள்ள பெரும்பாலான கடைகளில் கிறிஸ்துமஸ் மரங்கள் மற்றும் ஸ்டார்கள் விற்பனை துவங்கியுள்ளன. கடைகளில் வண்ண வண்ண விளக்குகளிடையே கிறிஸ்துமஸ் மரங்கள் வைக்கப்பட்டுள்ளது உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது. இதனை ஏராளமான உள்ளூர் மக்கள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகளும் வாங்கிச் செல்கின்றனர். மேலும், பெரிய ஓட்டல்களும் கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகிறது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : festival , Christmas festivel, Ooty,stars
× RELATED பொற்ெகாடியம்மன் திருவிழாவுக்கு 25...