×

மேகதாது அணை கட்டுவதற்கு தமிழக அரசின் அனுமதி தேவை இல்லை: கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா

பெங்களூரு: மேகதாது அணை கட்டுவதற்கு தமிழக அரசின் அனுமதி தேவையே இல்லை என கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார். கர்நாடகாவில் காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் ரூ.5.912 கோடி செலவில் அணை கட்ட அம்மாநில அரசு தி்டமிட்டுள்ளது. இதற்கான அனுமதியையும் மத்திய நிர்வளத்துறை அமைச்சகம் வழங்கியுள்ளது. மத்திய அரசு அனுமதி வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், மேகதாது அணை விவகாரம் குறித்து அம்மாநில முன்னாள் முதல்வர்கள், முன்னாள் நீர்வள அமைச்சர்கள், சட்ட அமைச்சர்களுடன் முதல்வர் குமாரசாமி ஆலோசனை நடத்தினார். அப்போது முன்னாள் முதல்வர் சித்தராமையா பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

அவர் கூறுகையில் நம் இடத்தில் மேகதாது அணை திட்டத்தை செயல்படுத்த எந்த தடங்கலும் இருக்கக் கூடாது. உச்சநீதிமன்ற தீர்ப்புகளும் நமக்கு சாதகமாகவே உள்ளன. எந்த உத்தரவிலும் மேகதாது அணையை செயல்படுத்த கூடாது என கூறவில்லை. எனவே இந்த திட்டத்திற்கு தமிழக அரசின் அனுமதி தேவையில்லை. எதிர்ப்பு தெரிவிக்க தமிழகத்திடம் எந்த ஆதாரமும் இல்லை. ஆனாலும் அரசியல் செய்வதற்காகவே தமிழக அரசு இப்பிரச்சினையை எழுப்புகிறது. கர்நாடகத்தின் திட்டம் நியாயமானது. எனவே உச்சநீதிமன்றத்திற்கு தேவையான விவரங்களை கர்நாடக அரசு வழக்கறிஞர்கள் வழங்க வேண்டும். ஒருவேளை இதற்கு இடைக்கால தடை விதித்தால், திட்டத்தை செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்படும். எனவே தடை ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தமிழகத்தில் தேர்தல் நடைபெறவுள்ளதால் இந்த பிரச்சினையை அந்த மாநில அரசு தீவிரமாக கொண்டுள்ளது என்று சித்தராமையா கூறியுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : government ,Tamil Nadu ,dam ,Chief Minister ,Megadat ,Karnataka Sitaramaya , Meghatad Dam, TN Government, Karnataka, Siddaramaiah
× RELATED முல்லைப் பெரியாறு அணையில் கூடுதல்...