×

மழை பெய்தால் உடனடியாக விடுமுறை அறிவிக்க கூடாது...... மாவட்ட ஆட்சியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை கட்டுப்பாடு

சென்னை: மழை பெய்தால் உடனடியாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கக்கூடாது என மாவட்ட ஆட்சியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை செயலர் பிரதீப் யாதவ் அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அவர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், மழையால் வெள்ளம் ஏற்படும் சூழல் ஏற்பட்டால் மட்டுமே விடுமுறை விட வேண்டும். மழையால் பாதிக்கப்படும் பகுதிகளுக்கு மட்டுமே விடுமுறை அறிவிக்க வேண்டும். விடுமுறை காரணமாக பாடத்திட்டங்கள் எதுவும் பாதிக்காத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும்.

மழையால் பாதிக்கப்படும் பகுதிக்கு மட்டுமே விடுமுறை அறிவிக்க வேண்டும். மழையால் போக்குவரத்து பாதிக்கப்படுவது போன்ற சூழல் ஏற்பட்டால் மட்டுமே விடுமுறை அறிவிக்க வேண்டும். சிறு தூறல் விழுந்தால் உடனே விடுமுறை அறிவிக்கக் கூடாது. விடுமுறை விடப்பட்டால் அதை சரி செய்ய சனிக்கிழமைகளில் வகுப்புகள் நடத்த வேண்டும்.

திருவிழா போன்றவற்றிற்கு உள்ளூர் விடுமுறை விடும்போது அதற்கு ஈடுசெய்யும் பணிநாளையும் சேர்த்து அறிவிக்க வேண்டும். மழை காரணமாக கல்வி மாவட்ட அளவில் அல்லது ஊராட்சி அளவில் மட்டுமே விடுமுறை விட வேண்டும். மழையைப் பொறுத்து பள்ளி தொடங்குவதற்கு 3 மணி நேரத்திற்கு முன் விடுப்பு அறிவிக்கலாம். இவ்வாறு சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : holiday ,rainstorm ,District Collectors ,School Department , Rain, School Education, holidays
× RELATED வார விடுமுறையையொட்டி ஏற்காட்டில்...