×

கன்னியாகுமரியில் பிரதமர் மோடி தியானம் நடத்த உள்ளது தேர்தல் நடத்தை விதிகளுக்கு முரணானது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கடிதம்

சென்னை: கன்னியாகுமரியில் பிரதமர் மோடி தியானம் நடத்த உள்ளது தேர்தல் நடத்தை விதிகளுக்கு முரணானது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கடிதம் அனுப்பியுள்ளார். பிரதமர் மோடியின் தியான நிகழ்ச்சியை ஒளிபரப்ப தடை விதிக்க வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையருக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம் அனுப்பியுள்ளார்.

மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது; “பிரதமர் மோடி தமிழ்நாட்டில் வந்து, கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறை மீது தியானம் செய்ய போகிறார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைந்து 7 வது கட்ட வாக்குப்பதிவு நடக்கவிருக்கும் சூழலில் இந்த தியானம் நடக்கவுள்ளது.

வாக்குபதிவு நாளிலோ அல்லது பிரச்சாரம் முடிவுக்கு வந்த பின்னரோ நேரடியாகவோ மறைமுகமாகவோ வாக்கு கேட்க கூடாது. ஆனால், அந்த விதியை ஏய்த்து சமூக ஊடகங்களிலும், செய்தி சேனல்களிலும் நேரலை செய்து வாக்கு வேட்டை ஆடுவதே பிரதமர் மோடியின் திட்டம்.

சென்ற தேர்தலிலும் அவர் இதே உத்தியை கடைப்பிடிப்பதை தேர்தல் ஆணையம் அனுமதிக்கக் கூடாது. தனிப்பட்டு தியானம் செய்தாலும் கூட அதை தொலைக்காட்சிகளிலோ, சமூக ஊடகங்களிலோ நேரலை செய்ய அனுமதிக்கக் கூடாது என மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்” என தெரிவித்துள்ளார்.

The post கன்னியாகுமரியில் பிரதமர் மோடி தியானம் நடத்த உள்ளது தேர்தல் நடத்தை விதிகளுக்கு முரணானது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கடிதம் appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Communist ,Secretary of State ,Chennai ,Modi ,Kanyakumari ,K. Balakrishnan ,Marxist ,
× RELATED நீட் தேர்வில் குளறுபடி: மருத்துவ...