×

கோத்ரா கலவரம் மோடி மீதான வழக்கு அடுத்த மாதம் விசாரணை: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: குஜராத் கலவர வழக்கில் அப்போதைய முதல்வர் மோடி மீது எந்த குற்றமும் இல்லை என சிறப்பு புலனா–்ய்வு குழு தாக்கல் செய்த அறிக்கைக்கு எதிராக, ஷகியா ஜாப்ரி தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் அடுத்த மாதம் விசாரிக்கிறது. குஜராத் மாநிலம், கோத்ராவில் கடந்த 2002ம் ஆண்டு சமர்பதி எக்ஸ்பிரஸ் ரயில் தீ வைக்கப்பட்டதற்கு மறுநாள், ஒரு கும்பல் அகமதாபாத்தில் உள்ள குல்பர்க் சொசைட்டியில் தாக்குதல் நடத்தியது. இதில் முன்னாள் எம்பி இசான் ஜாப்ரி என்பவர் உட்பட 68 பேர் கொல்லப்ட்டனர்.

இது குறித்து விசாரணை நடத்திய சிறப்பு புலனாய்வு குழு, இந்த கலவரத்தில் குஜராத்தின் அப்போதைய முதல்வர் மோடி உட்பட 63 பேர் மீது எந்த குற்றமும் இல்லை என கடந்த 2012ம் ஆண்டு அறிக்கை தாக்கல் செய்து இந்த வழக்கை முடித்தது. இதை விசாரணை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. இதை எதிர்த்து ஜாப்ரியின் மனைவி ஷகியா தாக்கல் செய்த மனுவை விசாரணை நீதிமன்றம் நிராகரித்தது. இதை எதிர்த்து இசான் ஜாப்ரியின் மனைவி ஷகியா ஜாப்ரி, குஜராத் உயர்மன்றத்தில் மனு செய்தார். விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பு சரி என குஜராத் உயர்நீதிமன்றம் கடந்த 2017ம் ஆண்டு கூறியது.  இதையடுத்து அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.

இந்த மனு மீது உச்ச நீதிமன்றத்தில் ஏற்கனவே விசாரணை நடந்தது. அப்போது இது குறித்து சமூக ஆர்வர் டீஸ்டா செதால்வத் என்பவரும் மனு செய்துள்ளார். அவரை இரண்டாவது மனுதாரராக இந்த வழக்கில் சேர்க்கிறோம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது. சிறப்பு புலனாய்வு குழு சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் முகில் ரோத்தகி, ‘‘ஷகியாவின் மனு விசாரணைக்கு உகந்தது இல்லை’’ என்றார். டீஸ்டாவை 2வது மனுதாரராக சேர்ப்பதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்தார். இவர்களின் கோரிக்கை ஆதரவாக எந்த ஆவணங்களும் இணைக்கப்படவில்லை’’ என்றார்.

ஷகியாவின் வக்கீல் சி.யு.சிங் வாதிடுகையில், ‘‘எஸ்.ஐடி அறிக்கையை விசாரணை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது சரி என உயர் நீதிமன்றம் தவறாக உத்தரவு பிறப்பித்துள்ளது’’ என கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் கன்வில்கர், ஹேமந்த் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கின் விசாரணையை ஜனவரி 3வது வாரத்துக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

பாலியல் தொல்லை பற்றி புகார் கொடுப்பதை தடுக்க இளம்பெண்ணுக்கு தீவைப்பு: உபி.யில் சகோதரர்கள் அட்டூழியம்

சிதாப்பூர்:  உத்தரப் பிரதேச மாநிலம், சிதாப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் 29 வயது பெண். திருமணமான இவரை கடந்த 29ம் தேதி ராமு (32), ராஜேஷ் (28) ஆகியோர் பாலியல் ெதால்லை கொடுத்தனர். இது குறித்து அந்த பெண், தம்போர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். ஆனால், போலீசார் புகாரை ஏற்கவில்லை. இந்நிலையில், கடந்த 1ம் தேதி இளம்பெண்ைணை பொதுஇடத்தில் பிடித்த சகோதரர்கள் இருவரும், ‘எங்கள் மீதா புகார் கொடுக்க பார்க்கிறாய்?’ என கூறி, அவர் மீது மண்ணெண்ெணய் ஊற்றி தீ வைத்தனர். உடல் முழுவதும் தீப்பற்றிய நிலையில் இளம்பெண் அலறினார்.

சத்தம்கேட்டு ஒடி வந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
புகாரை ஏற்காத 3 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக இருந்த சகோதரர்கள் இருவரும் ைகது செய்யப்பட்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Godhra ,Supreme Court , Godhra riot , Supreme Court,modi
× RELATED மணல் குவாரி வழக்கில் தேவையில்லாமல்...