×

ஒபெக் அமைப்பில் இருந்து விலகும் கத்தார்...... கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயம்

தோகா: பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் அமைப்பான ஒபெக் (opec)-ல் இருந்து அடுத்தாண்டு ஜனவரி மாதத்துடன் விலகுவதாக கத்தார் அதிரடியாக அறிவித்துள்ளது. தோகாவில் செய்தியாளர்களை சந்தித்த கத்தாரில் எரிசக்தித்துறை அமைச்சர், இயற்கை எரிவாயு உற்பத்தியை ஆண்டுக்கு 77 மில்லியன் டன்களில் இருந்து 110 டன்களாக அதிகரிக்கும் நோக்கில் இந்த முடிவை அரசு எடுத்திருப்பதாக தெரிவித்தார்.

மேலும் ஒபெக் அமைப்பில் இருந்து விலகும் முடிவை திடீரென அரசு எடுக்கவில்லை என்றும், நீண்ட காலமாகவே இதுபற்றி ஆலோசித்து வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். வரும் 6-ம் தேதி ஒபெக் அமைப்பின் கூட்டம் நடைபெற உள்ள நிலையில் இந்த அதிரடி முடிவை கத்தார் எடுத்துள்ளது. உலகின் பாதிக்கும் மேற்பட்ட கச்சா எண்ணெய் தேவையை பூர்த்தி செய்துவரும் கத்தார், ஒபெக் அமைப்பில் இருந்து விலகுவதால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலையில் அதிரடி மாற்றங்கள் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Qatar ,Obec , opec, Qatar, crude oil, OPEC
× RELATED நடுவானத்தில் குலுங்கிய கத்தார்...