×

அம்பத்தூர் காந்தி நகரில் டாஸ்மாக் கடைக்கு கடும் எதிர்ப்பு: உண்ணாவிரதம் இருக்க மக்கள் முடிவு

அம்பத்தூர்:  அம்பத்தூர் அடுத்த ஒரகடம், காந்தி நகர் நெடுஞ்சாலையில் பள்ளிக்கூடம், ஆரம்ப சுகாதார மையம், கோயில் மற்றும் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இச்சாலையில் அரசு டாஸ்மாக் கடை கடந்த சில ஆண்டாக  இயங்கி வந்தது. இதற்குஅப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதன்பேரில் கடந்த ஓராண்டுக்கு முன்பு இந்த டாஸ்மாக் கடை மூடப்பட்டது.  இந்நிலையில், கடந்த நவம்பர் 12ம் தேதி டாஸ்மாக் கடை மீண்டும் அதே பகுதியில் திறக்கப்பட்டது. இதனை அடுத்து நூற்றுக்கும் மேற்பட்ட  பெண்கள் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பின்னர் சென்னை மாவட்ட ஆட்சியர், டாஸ்மாக் மேலாளர் ஆகியோரிடம் மீண்டும் கடையை மூட வேண்டும் என மனு அளித்தனர்.

ஆனாலும், அதிகாரிகள் எவ்வித நடவடிக்கை எடுக்காததால் கடை தொடர்ந்து இயங்கி வருகிறது. இதனால் பெண்கள் உள்பட பொதுமக்கள் குடிமகன்களால் தினமும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு காந்திநகர் முன்னேற்ற சங்கமும் மற்றும் அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகளும் இணைந்து ஆலோசனை கூட்டம் ஒரகடத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், காந்தி நகர் நெடுஞ்சாலையில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் விரைவில் பொதுமக்களை திரட்டி உண்ணாவிரதம் நடைபெறும் என  முடிவெடுக்கப்பட்டுள்ளது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : protest ,shop ,city ,Tashmak ,Ambattur Gandhi , Ambattur ,Gandhiji, Tasmual shop,stay fast
× RELATED பிளாஸ்டிக் பொருட்கள் விற்ற கடைகளுக்கு அபராதம்