×

கஜா புயல் பாதித்த 4 இடங்களில் டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறப்பு

சென்னை: கஜா புயல் பாதித்த 4 இடங்களில் டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக டாஸ்மாக் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. கஜா புயல் தாக்குதல் காரணமாக தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 4 மாவட்டங்களிலும் 600க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது. இந்தநிலையில், இயல்பு நிலை திரும்பிவரும் தஞ்சாவூர் மாவட்ட பகுதிகளில் 60 டாஸ்மாக் கடைகள் நேற்று முதல் திறக்கப்பட்டுள்ளதாக டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.இதுகுறித்து டாஸ்மாக் வட்டாரங்கள் கூறியதாவது: புயல் பாதித்த பெரும்பாலான பகுதிகளில் 2 வாரங்களுக்கு மேலாகியும் இயல்பு நிலை திரும்பவில்லை.

டவுன் பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளிலேயே ஓரளவுக்கு இயல்பு நிலை திரும்பி உள்ளது. ஏற்கனவே, புயல் பாதித்த 4 மாவட்டங்களில் மறு உத்தரவு வரும் வரை மதுக்கடைகளை மூட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. புயல் பாதிப்பு ஏற்பட்டு மெல்ல, மெல்ல இயல்பு நிலை திரும்பி வரும் தஞ்சாவூர் டவுன், கும்பகோணம், பூதலூர் ஒன்றியம், திருவையாறு இடங்களிலும் மூடப்பட்ட 60 டாஸ்மாக் கடைகள் நேற்று முன்தினம் மாலை 5 மணியளவில் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இதை அதிகாரிகள் யாரும் கண்காணிக்கவில்லை. இவ்வாறு கூறியுள்ளன.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : opening ,places ,shops ,storm ,Tashmak ,Ghaz , gaja storm, Tasmac,
× RELATED கலெக்டர் அலுவலக வளாகம் உட்பட குமரியில் 18 இடங்களில் தானியங்கி மழைமானி