×

போலீஸ் சேனல்..... நானும் போலீஸ்தாம்பா... புலம்புகிறார் விழுப்புரம் எஸ்ஐ

விழுப்புரம் நகரில் சூரியன் மறையும் திசையின் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் பணியில் இருந்தாலும் மருதாணி பெயரைக்கொண்ட எஸ்ஐ தான் பவர்புல்லாக இருந்து வருகிறார். ஸ்டேஷனுக்கு வரும் பெட்டிஷன் எல்லாவற்றையும் முதல்கட்டமாக அவர் விசாரிச்ச பிறகுதான் மற்றவர்களுக்கு பிரித்துகொடுப்பார். சாராயம் முதல் பெட்டி கேசாக இருந்தாலும் முதல் என்ட்ரி அவர்தானாம். அந்த ஸ்டேஷனில் சில மாதத்துக்கு முன்பு சீனியர் எஸ்ஐ ஒருவர் பணியில் சேர்ந்தார். அவருக்கு எந்த முக்கியத்துவமும் ஸ்டேஷன்ல கொடுக்கலையாம். கேஸ் கட்டு எதுவும் அவர்கிட்ட போகாத அளவுக்கு பவர்புல் எஸ்ஐ பார்த்துக்கிட்டாராம்.

வழக்கம்போல் இன்ஸ்பெக்டரைப் போல இந்த சீனியர் எஸ்ஐயும் ரவுண்ட் போவதோடு தன் வேலையை முடிச்சிக்கிட்டாராம். ஸ்டேஷன்ல நடந்த விவரத்தை சக காக்கியோட பகிர்ந்துகொண்ட அவர் நானும் டிபார்ட்மென்ட்டுதான் என்னை யாரும் மதிக்கமாட்ராங்க..... எல்லாத்தையும் அவரே பார்க்கிராரு. லீவுல இருந்தாலும் மறுநாள்வந்து வழக்கில கைது நடவடிக்கையெல்லாம் எடுக்கிறாரு, நம்பளை ஒரு டம்மி பீசா வச்சிருக்காங்க. இன்ஸ் புரமோஷன் இன்னும் வராததால் நான் இந்த விஷயத்த பெரிதாக்காமல் இருக்கிறேன், வந்தபிறகு நான் என் வேலையை காட்டுவேன் என வருவோர் போவோரிடம் புலம்பி வருகிறாராம்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Police Channel ,I Policeman ,Lips Villupuram SI , Police Channel
× RELATED போலீஸ் சேனல்