×

ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் இன்று ஓய்வு : சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு புதிய ஏ.டி.ஜி.பி.-யாக அபய்குமார் சிங் நியமனம்

சென்னை: சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு புதிய ஏ.டி.ஜி.பி.-யாக அபய் குமார் சிங் நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பொன்.மாணிக்கவேல் இன்று ஓய்வு பெறுவதால் புதிய ஏ.டி.ஜி.பி. நியமனம் செய்யப்பட்டுள்ளார். கரூரில் காகித நிறுவனத்தில் கண்காணிப்பு அதிகாரியாக அபய்குமார் சிங் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பொன்.மாணிக்கவேல் இன்று ஓய்வு பெறுவதையொட்டி சென்னை அயனாவரத்தில் உள்ள ஐசிஎப் அலுவலகத்தில் ரயில்வே பாதுகாப்பு படை சார்பில் அவருக்கு பிரிவு உபசார விழா நேற்று நடந்தது. இந்த விழாவில் பேசிய ஐ.ஜி பொன்.மாணிக்கவேல், என்னுடைய பணியை நேர்மையான அதிகாரிகளையும், இளைஞர்களையும் நம்பி விட்டுச் செல்கிறேன் என்றார்

பொன்.மாணிக்கவேல் பேட்டி

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியும், ரயில்வே காவல்துறை ஐஜியுமான பொன். மாணிக்கவேல் இன்றுடன் ஓய்வு பெறுகிறார். இந்நிலையில், சென்னை, திருச்சி ரயில்வே காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு வெகுமதி வழங்கி பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் விழாவில் பேசிய அவர், நீதிமன்றங்களை மதித்து நடப்பதுடன், விசாரணை தொடர்பாக வழக்கறிஞர்களிடம் ஆலோசனை பெற வேண்டும் என்று காவலர்களுக்கு, ஐ.ஜி., பொன்.மாணிக்கவேல் அறிவுரை வழங்கினார். தமக்கு அரசு மற்றும் அரசியல்வாதிகளால் எந்த பிரச்சினையும் இல்லை, அதிகாரிகளால் தான் பிரச்சினை என்று தெரிவித்தார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : IGP Abhimukh Singh ,ADG , Statue Prevention Division, IG, Pon.Manikaval, Abhay Kumar Singh
× RELATED ரயில் பயணிகள் தங்கள் பாதுகாப்புக்கு...