×

ஷார்ஜாவில் முன்னணி நிறுவனத்தில் டிப்ளமோ மெக்கானிக் பணிக்கு விண்ணப்பிக்கலாம் : தமிழக அரசு தகவல்

சென்னை: தமிழக அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் சுனீல் பாலீவால் வெளியிட்ட அறிவிப்பு: ஐக்கிய அரபு நாட்டிலுள்ள ஷார்ஜாவில் ஒரு முன்னணி நிறுவனத்தில் பணிபுரிய டிப்ளமோ மெக்கானிக் தேர்ச்சி பெற்ற  மேற்பார்வையாளர்கள், பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐ.டி.ஐ படித்த Steel Structural Fabricator, Radiographic Quality 4G Arc,  MIG Welders, CNC Plasma, CNC laser Machine இயக்குபவர்கள் மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஐக்கிய அரபு நாட்டின் செல்லத்தக்க லைட் டுயூட்டி டிரைவர் மற்றும் பஸ் டிரைவர் உரிமம்  உள்ள ஓட்டுநர்கள் தேவைப்படுகிறார்கள். இந்த பணிகளுக்கு 1ம் தேதி (சனிக்கிழமை) காலை 9 மணிக்கு  நேர்காணல் நடைபெறும். மேலும் டிப்ளமோ மெக்கானிக் தேர்ச்சி பெற்ற  QA/QC ஆய்வாளர்கள், மற்றும் டாக்குமேன்டேசன் கன்ட்ரோலர்ஸ், பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐ.டி.ஐ படித்த சிஎன்சி புரோகிராமர், லேத் மிஷின் இயக்குபவர்கள், ஆட்டோமேசன் கன்ட்ரோல் & இன்ஸ்டிடியூமேன்சன் டெக்னீசியன், தொழிற்சாலைகளில் பணிபுரிந்த எலக்ட்ரீசியன் மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஒர்க்‌ஷாப் மெயின்டென்ஸ் மெக்கானிக், ஆட்டோ மெட்டிக் வித் டீசல் இன்ஜின் அனுபவம் மற்றும் தொழிற்சாலைகளில் பணிபுரிந்த அனுபவமுள்ள ஸ்டோர் கீப்பர்கள் தேவைப்படுகிறார்கள். இந்த  பணிகளுக்கு 2ம் தேதி காலை 9 மணிக்கு  நேர்காணல் நடைபெறும்.

அனைத்து பணியாளர்களுக்கும் குறைந்தபட்சம் மூன்று வருடம் முதல் எட்டு வருடம் வரை பணி அனுபவம் மற்றும் 28 முதல் 35 வரை வயது வரம்பு  இருத்தல் வேண்டும். தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு திறமைக்கேற்றவாறு ஊதியம், உணவு, இருப்பிடம், விமான பயணச்சீட்டு, மருத்துவம் மற்றும் காப்பீட்டுத் திட்டம் போன்ற  சலுகைகள் ஐக்கிய அரபு நாட்டின் சட்ட திட்டத்திற்கேற்றவாறு  வழங்குவதுடன் மிகை நேர ஊதியமும் வழங்கப்படும். இந்த பணியிடங்களுக்கு உரிய தகுதி மற்றும் விருப்பமிருப்பின், தங்களின் சுயவிவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வித்தகுதி, அனுபவம், செல்லத்தக்க பாஸ்போர்ட் நகல்கள் மற்றும் மூன்று புகைப்படத்துடன் ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்திலுள்ள, அயல் நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம், எண்.42 ஆலந்தூர் சாலை, திரு.வி.க. தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை  600032 அலுவலகத்தில் நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : company ,Sharjah , Applications,submitted to Diploma Mechanic ,leading company, Sharjah,Tamilnadu Government Information
× RELATED ஆவின் பால் பாக்கெட்டுகளில்...