×

தஞ்சையில் புயல் பாதித்த இடங்களில் ஜெனரேட்டரை பயன்படுத்தி குடிநீர் விநியோகம்

தஞ்சை: கஜா புயல் நாகப்பட்டினம் மாவட்டம் அருகே கரையைக் கடந்த போது டெல்டா மாவட்டங்கள் உள்பட 12 மாவட்டங்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாயின. அரசு எடுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் பெருமளவு உயிர்ச் சேதங்கள் தவிர்க்கப்பட்டன.எனினும் புயலின் தாக்கத்தினால் கால்நடைகள், வீடுகள், பயிர்கள், மின்கம்பங்கள், குடிநீர் குழாய்கள் போன்ற உள்கட்டமைப்புகள் பெருமளவில் சேதம் அடைந்தன. இதையடுத்து மக்களை பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்குத் தேவையான உணவு, பாதுகாக்கப்பட்ட குடிநீர், பால், வேட்டி, சேலை ஆகியவற்றை வழங்கப்பட்டு வருகிறது.

கஜா புயலில் பாதிக்கப்பட்ட தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளுக்கு குடிநீர் விநியோகிக்கும் பணிகள் தீவிரம் அடைந்துள்ளது. கஜா புயல் தாக்கி 11 நாட்கள் ஆகியுள்ளன. இருப்பினும் அங்குள்ள மக்கள் இன்னும் அதில் இருந்து மீளவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து கஜா புயலால் பாதித்த தஞ்சை மாவட்டம் ஆவணம் பகுதியில் ஜெனரேட்டர் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆவணம் பகுதியில் உள்ள மக்கள் கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் குடிநீர் மற்றும் மின்சராம் இன்றி அடிப்படை தேவைகளுக்காக கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதையடுத்து புயல் பாதிக்கப்பட்ட அந்த பகுதிக்கு குடிநீர் ஜெனரேட்டர் மூலம் பஞ்சாயத்து யூனியன் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. ஒரு வீட்டிற்கு 4 குடங்கள் வீதம் ஒவ்வொரு வீட்டிற்கும் அவ்வாறு குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றது. மேலும் ஆவணம் பகுதியில் கஜா புயலால் மின்சாரம் பாதிக்கப்பட்டு இருந்தது. தற்போது மின் சீரமைப்பு பணிகளும் நடைபெற்று வருகின்றது. புயலில் அறுந்து விழுந்த மின்கம்பிகளை அகற்றிவிட்டு புதிய மின்கம்பிகள் பொருத்தப்பட்டு வருகின்றனர். கடந்த 11 நாட்களாக கஜா புயலினால் பாதிக்கப்பட்டிருந்த இப்பகுதி மக்களுக்கு மறு சீரமைப்பு பணிகள் துவங்கியுள்ளதாக கூறப்படுகிறது.    


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : storm ,areas ,Tanjore , Tanjore, Ghaja storm, drinking water supply,aavanam
× RELATED தஞ்சை பெருவுடையார் கோயிலை சிதைக்கும்...