×

துறையூர் அருகே காட்டாற்று வெள்ளத்தில் தற்காலிக பாலம் சேதம்

துறையூர்: துறையூர் ஒன்றியம் ஒட்டப்பட்டியில் காட்டாற்று வெள்ளத்தில் தற்காலிக பாலம் அடித்துச் செல்லப்பட்டதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
துறையூர் ஊராட்சி ஒன்றிம் ஒட்டம்பட்டியில் இருந்து நரசிங்கபுரத்திற்கு செல்லும் சாலையில் ஒட்டம்பட்டி அருகே பச்சமலையில் இருந்து சிக்கத்தம்பூர் ஏரிக்கு செல்லும் கானப்பாடி ஓடையின்மீது பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் வழியாக துறையூர் உப்பிலியபுரம் சாலையில் இருந்து செங்காட்டுப்பட்டி பகுதியில் உள்ள 20க்கு மேற்பட்ட கிராமங்களுக்கு சென்று வரலாம். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் பெய்தமழையில் இந்த சாலையில் இருந்த பாலம் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது.

இதனால் இந்த பாதையில் செல்லமுடியாமல் ஒட்டம்பட்டியில் இருந்து பெருமாள்பாளையம் வழியாக நரசிங்கபுரம்வரை சுற்றி செல்ல வேண்டியுள்ளது. இதனால் விவசாய பணிகள் பாதிக்கப்பட்டதால் விவசாயிகள் தண்ணீரில் பாலம் அடித்துச் செல்லப்பட்ட பகுதியில் மண்ணை கொட்டி மேடாக்கிஅதன் வழியாக சென்று வந்து கொண்டிருந்தனர். கடந்த இரண்டு தினங்களுக்கு முன் பச்சமலையில் பெய்த மழையில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு விவசாயிகள் மண்ணை கொட்டி பயன்படுத்திய மண்மேடும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு விட்டது. இதனால் மீண்டும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு விட்டது . இது பற்றி ஊராட்சி ஒன்றிய ஆணையரிடம் கேட்டபோது புதியபாலம் கட்ட திட்டவரைவு அனுப்பப்பட்டுள்ளதாகவும், விரைவில் பணி மேற்கொள்ளப்படஉள்ளது என்று தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : gorge flood ,Thuraiyur , Thuraiyur, flood, bridge
× RELATED துறையூர் அருகே கார், ஆட்டோ மோதல் முதியவர் பரிதாப பலி