×

கருங்கலில் பொதுமக்களை அச்சுறுத்தும் மனநோயாளி

கருங்கல்: கருங்கல் பகுதிக்கு கடந்த ஒரு மாதத்துக்கு  முன்பு சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஒரு மனநோயாளி வந்து சேர்ந்தார். அவர் நீண்ட தாடி மற்றும் முடியுடன் காணப்பட்டார். நாளடைவில் அவர் அணிந்திருந்த ஆடைகளும் அழுக்கு அடைந்து பார்க்கவே அலங்கோலமாக காட்சி அளித்தார். முதலில் ஆடைகளுடன் நடமாடியவர் பின்னர் அரை நிர்வாணமாகவும்,  பின்னர் முழு நிர்வாணமாகவும் நடமாடி வந்தார்.பெண்கள், கல்லூரி மாணவிகள் அதிகம் காணப்படும் பஸ் நிலையம், சந்திப்பு, மார்க்கெட் சாலை, காவல் நிலைய பகுதி உள்ளிட்ட பகுதிகளில் இவரின் நடமாட்டம் இருந்தது.  நிர்வாணமாக சுற்றித்திரிந்ததால் பெண்கள் இவரை கண்டவுடன் அலறி அடித்து ஓடினர். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் அவரை பிடித்து குளிக்க வைத்து, தாடி மற்றும் முடியை வெட்டி புதிய ஆடைகளை அணிவித்தனர்.

ஆனால் அந்த நபர் சட்டையை கழற்றிவிட்டு முழுக்கால் சட்டை மட்டும் அணிந்த நிலையில் அலைந்து திரிகிறார். தற்போது கருங்கல் காவல் நிலைய பகுதியில்தான் அதிகம் வலம்வருகிறார். மேலும் ஓட்டல் எச்சில்  கழிவுகளை சாப்பிடுவது வழக்கம். சில நேரங்களில் கடைகளில் புகுந்து பொருட்களை  வலுக்கட்டாயமாக எடுத்து செல்லும் நிகழ்வுகளும் நடந்து வருகின்றன.இந்த மன நோயாளி சமீபநாட்களாக பொதுமக்களை தாக்கும் முயற்சியில் ஈடுபடுவதும் உண்டு. அப்போது பொதுமக்களும் இவரை தாக்க முனைவது உண்டு. பின்னர் மனநோயாளி என தெரிந்து விட்டுவிடுவர். காவல் நிலைய பகுதியில் நடமாடினாலும் இவரை பிடித்து காப்பகத்தில் ஒப்படைக்க போலீசார் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. இவரால் பொதுமக்களுக்கு கடும் அச்சுறுத்தில் உள்ளது. மேலும் அவரை பாதுகாக்கும் பொருட்டு, அந்த மனநோயாளியை காப்பகத்தில் ஒப்படைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : psychologist ,public , Granite, civilian, mentally challenged
× RELATED தமிழ்நாட்டில் தொடர் மழை பெய்து...