×

சக காவலரை முன்விரோதம் காரணமாக விரட்டிப்பிடித்து விபத்து ஏற்படுத்திய விவகாரம் : ஆய்வாளர் பணியிடை நீக்கம்

சென்னை; போக்குவரத்து காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரனை பணியிடை நீக்கம் செய்து சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். சக காவலரை முன்விரோதம் காரணமாக விரட்டிப்பிடித்து விபத்து ஏற்படுத்திய விவகாரம் தொடர்பாக ரவிச்சந்திரன் தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே ரவிச்சந்திரன் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில், தற்போது பணிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சென்னை தேனாம்பேட்டை போக்குவரத்து காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருபவர் தருமன். இவர் தன் தாயின் ஈமச்சடங்கிற்கு செல்ல வேண்டும் என்று இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரனிடம் விடுப்பு கேட்டுள்ளார். விடுப்பு தர மறுத்ததால் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வாக்கிடாக்கி மூலம் காவலர் தருமன் தகவல் தந்தார். இதனால் கோபம் கொண்ட இன்ஸ்பெக்டர்,  தருமன் வீட்டிற்கு சென்று கொண்டிருக்கும் போது நடுரோட்டில் ஓடிச்சென்று இருசக்கர வாகனத்திலிருந்து கீழே தள்ளினார்.

பின்னர் மருத்துவமனைக்கு அழைத்து சென்று அவர் மதுபோதையில் உள்ளதாக பொய் சொல்லி மேல் அதிகாரியிடம் கூறி அவரை பணியிடை நீக்கம் செய்துள்ளார். இச்சம்பவம் குறித்து காவலர் தருமனிடம் விசாரணை செய்தபோது அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவியிருக்கிறது என்று தன்னிலை விளக்கம் அளித்தார். மேலும், இச்சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதையடுத்து போக்குவரத்து கூடுதல் ஆணையர் அருண் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரனிடம் இணை ஆணையர் சுதாகர் விசாரணை நடத்தினார். அதில் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பார்த்தபோது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த காவலர் தருமனை இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ஓடிப்போய் கீழே தள்ளியது உறுதியானது. இதையடுத்து அவர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரனை தற்போது  பணியிடை நீக்கம் செய்து சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : incident ,accident ,co-defendant ,inspector , Traffic Police Inspector, Ravichandran, has been dismissed
× RELATED புதுக்கோட்டையில் 7 வயது சிறுமி பாலியல்...