×

ஜெர்மனியில் விலங்கியல் பூங்காவில் பிறந்த வெள்ளை சிங்கக்குட்டிகளுக்கு பெயர் சூட்டும் விழா

மேக்டிபர்க்: ஜெர்மனியில் விலங்கியல் பூங்கா ஒன்றில் பிறந்த வெள்ளை சிங்கக்குட்டிகளுக்கு பெயர் சூட்டும் விழா நடைபெற்றது. கடந்த ஜூலை மாதம் மேக்டிபர்க் விலங்கியல் பூங்காவில் அரியவகை வெள்ளைச் சிங்கம் ஒன்று மூன்று ஆண், ஒரு பெண் என மொத்தம் நான்கு குட்டிகளை ஈன்றது. மேக்டிபர்க் விலங்கியல் பூங்காவில் பார்வையாளர்களுக்கு திறந்து விடப்பட்ட அந்தக் குட்டிகளின் செயல்கள் பார்வையாளர்கள் அனைவரையும் கவர்ந்து வருகிறது.

இந்நிலையில் நேற்று அந்த குட்டிகளுக்கு பெயர் சூட்டும் விழா கோலாகலமாக நடத்தப்பட்டது. அதில் ஆண் சிங்ககுட்டிகளுக்கு அமரி (Amari), நியாலா (Nyala), சிம்பா (Simba) என பெயர் சூட்டப்பட்டுள்ளது. மேலும் பெண் குட்டிக்கு டஜோ (Tajo) என்ற பெயர் சூட்டப்பட்டது. வெள்ளை சிங்கக் குட்டிகளை பார்க்க ஆயிரக்கணக்கானோர் விலங்கியல் பூங்காவிற்கு வருகின்றனர். மேலும் குட்டிகளின் குறும்புத்தனமான விளையாட்டுக்களை படம்பிடித்து சமூகவலைத்தளங்களில் பதிவேற்றி வருகின்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Germany ,Zoological Park , Zoo,Germany,naming ceremony,newborn,white lion cubs
× RELATED பாலியல் வழக்கில் கைதான பிரஜ்வல்...