×

வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சியால் டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை : தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள லட்சத்தீவு பகுதிகளில் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் தென்தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், காற்று மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்றும் கூறினார். சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று தெரிவித்துள்ளார்.

கடந்த 24 மணி நேரத்தில் ராமேஸ்வரத்தில் 23 செ.மீ. மழை கொட்டி தீர்த்துள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் தலையஞாயிறில் 21 செ.மீ மழை பெய்துள்ளது கடந்த 24 மணி நேரத்தில் வலங்கைமானில் 19 செ.மீ மழை  பெய்துள்ளது. திருவாரூர் 17 செ.மீ, நீடாமங்கலம், குடவாசலில் 13 செ.மீ  மழை பெய்தது. மன்னார்குடி 11 செ.மீ, நன்னிலம் 10செ.மீ, அரியலூரில்10 செ.மீ மழை பெய்துள்ளது. திருத்துறைப்பூண்டி15 செ.மீ, நாகை 17 செ.மீ தரங்கம்பாடியில் 10 செ.மீ   மழை பெய்துள்ளது. தமிழகம் மற்றும் புதுவையில் இன்று வரை பெய்துள்ள சராசரி மழையின் அளவானது 33 செ.மீ மழை பதிவாகியுள்ளது என தெரிவித்தார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : rainfall ,districts ,Delta , Overlay cycle,heavy rain,opportunity
× RELATED டெல்டா மாவட்டங்களில் 4வது நாளாக மழை;...