×

சிறப்பு பள்ளிகளில் பயிலும் மாற்றுத் திறன் குழந்தைகளுக்கு ஜூன் மாதம் முதல் மதிய உணவு திட்டம்!!

சென்னை : தொண்டு நிறுவனங்கள் நடத்தும் சிறப்பு பள்ளிகளில் பயிலும் மாற்றுத் திறன் குழந்தைகளுக்கு ஜூன் மாதம் முதல் மதிய உணவு திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது. சிறப்பு பள்ளியில் பயிலும் மாற்றுத் திறன் மாணவர்களுக்கும் அரசு பள்ளிகளில் உள்ள சத்துணவு மையத்தில் இருந்து மதிய உணவு வழங்க கடந்த ஆண்டு அரசாணை வெளியிடப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டது. இதன்படி தற்போது தமிழ்நாடு முழுவதும் தொண்டு நிறுவனங்களால் நடத்தப்படும் 175 சிறப்புப் பள்ளிகளில் காலை வந்து மாலை வீடு திரும்பும் 5, 725 மாணவ, மாணவிகளுக்கு மதிய உணவு வழங்கப்பட உள்ளது.

மாற்றுத் திறனாளிகள் நல இயக்குனர் இதற்கான உத்தரவை வெளியிட்டார். அதன்படி அரசுப்பள்ளி சத்துணவு மையத்தில் இருந்து அருகில் உள்ள சிறப்புப் பள்ளிகளுக்கு மதிய உணவு தயாரிக்கப்பட்டு விநியோகம் செய்யப்படும். உரிய நேரத்தில் மதிய உணவினை சூடாகவும் பாதுகாப்பான முறையில் கொண்டு செல்லவும் உணவினை முறையாக வழங்கிட பொறுப்பாளர்களை நியமிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜூன் 1ம் தேதியில் இருந்தே சிறப்பு பள்ளிகளில் பயிலும் மாற்றுத் திறன் குழந்தைகளுக்கு விநியோகிக்கப்படும் என்று மாற்றுத் திறனாளிகள் நல இயக்குனர் தெரிவித்துள்ளார்.

The post சிறப்பு பள்ளிகளில் பயிலும் மாற்றுத் திறன் குழந்தைகளுக்கு ஜூன் மாதம் முதல் மதிய உணவு திட்டம்!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chaturavu Centre ,Government Schools for Special School ,Alternative Ability ,Dinakaran ,
× RELATED மேலாளர் அறைக்கு வந்த மர்ம தொலைபேசி...