×

குமரியில் சென்னை-அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்து திமுக, காங்கிரஸ் போராட்டம்

குமரி: கன்னியாகுமரியில் சென்னை-அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்து திமுக, காங்கிரஸ் போராட்டம்  நடத்தி வருகிறது. சென்னையில் இருந்து கன்னியாகுமரி செல்லும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் கேரள மாநிலம் கோச்சிவேலிக்கு இயக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாகர்கோவிலில் திமுக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையிலிருந்து குமரிக்கு வரக்கூடிய எக்ஸ்பிரஸ் ரயிலை, கன்னியாகுமரியிலிருந்து திருவனந்தபுரம் அருகில் உள்ள கோச்சிவேலிக்கு கடந்த 15ம் தேதியிலிருந்து திருப்பிவிடப்பட்டுள்ளது. இதனால் கன்னியாகுமரியிலிருந்து சென்னைக்கு செல்ல வேண்டிய ரயில் ஒன்றரை மணி நேரத்திற்கு மேல் கால தாமதமாக சென்று வருகிறது. இதனால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்படுபவதாக கூறப்படுகிறது. மேலும் கேரள ரயில்வே நிர்வாகம் கன்னியாகுமரி மாவட்ட ரயில்வே நிர்வாகத்தை புறக்கணித்து வருவதாகவும் குற்றசாட்டுகள் எழுந்துள்ளது.

இதனால் கன்னியாகுமரி ரயில்வே கோட்டத்தை மதுரை ரயில்வே கோட்டத்துடன் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி திமுக, காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் சார்பில் நாகர்கோவில் ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டத்தை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த போராட்டத்தில் விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி கலந்து கொண்டார். இது குறித்து அவர் கூறுகையில், குமரி- சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் கேரளா மாநிலம் கோச்சிவேலி பகுதிக்கும் சென்று வருவதால் ரயில் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேல் தாமதமாய் வருவதாக குற்றம் தெரிவித்தார். மேலும் இதனால் பயணிகள் மிகவும் பாதிக்கப்படுவதாக அவர் கூறினார். மேலும் கன்னியாகுமரி கோட்டத்தை மதுரை ரயில்வே கோட்டத்துடன் இணைப்பது தொடர்பாக மனுக்கள் அளித்தும் இதுவரை எந்த பயனும் இல்லாததால், தற்போது மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தால் ரயில் போக்குவரத்தில் தடங்கல் ஏற்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : DMK ,fight ,Congress ,Chennai , DMK, Congress, Struggle, Train Stir
× RELATED திமுக-காங். கூட்டணியில் எந்த மாற்றமும்...