×

உலகிலேயே முதல்முறையாக ஸ்டெம்செல் மூலம் சேதமடைந்த திசுக்களை சரிசெய்ய முடியும் என நிரூபித்து சீன விஞ்ஞானிகள் அசத்தல்

பெய்ஜிங்: ஸ்டெம்செல் (stem cell) எனப்படும் தொப்புள் கொடியின் மூலம் சேதமடைந்த திசுக்களை சரிசெய்ய முடியும் என்பதை உலகிலேயே முதல்முறையாக சீன விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர். குழந்தை பிறந்தவுடன் அதன் தொப்புள் கொடியில் உள்ள குருதியை சேகரித்து வைப்பதின் மூலம் பல்வேறு நோய்களை குணப்படுத்த முடியும் என்பது ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இரத்த அணுக்கள் பலவற்றில் ஹெமாட்டோபாய்டிக் ஸ்டெம் செல்கள் அடையாளம் காணப்பட்டு, அவற்றின் செயல்பாடுகளை முழுவதுமாக குறிப்பிட்ட வாஸ்குலர் அமைப்பிற்குள் செலுத்துவதற்கும் ஒரு வகை செல்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர். சக்கரை நோய், இரத்த சம்மந்தமான நோய்கள் மற்றும் புற்றுநோய்கள் போன்ற முக்கிய நோய்களைக் குணப்படுவதற்கான ஒரு உறுதியான அணுகுமுறையாக இவை இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : scientists ,Chinese ,time ,world , Chinese scientists,proven,tissue,damaged,cure,stem cells,first time,world
× RELATED மீண்டும் சர்ச்சை கிளம்பியது; சீன...