×

கோவா கப்பல்கட்டும் தளத்தில் 2 போர்க்கப்பல்களைக் கட்டுவதற்கான உடன்பாட்டில் இந்தியா - ரஷ்யாவுடன் இன்று கையொப்பம்

கோவா: கோவா கப்பல்கட்டும் தளத்தில் 2 போர்க்கப்பல்களைக் கட்டுவதற்கான உடன்பாட்டில் இந்தியாவும் ரஷ்யாவும் இன்று கையொப்பமிடுகின்றன. ரஷ்யாவின் கிரிகோரோவிச் வகைப் போர்க்கப்பல் கட்டும் தொழில்நுட்பத்தைப் பெற்றுக் கோவா கப்பல்கட்டும் தளத்தில் அவ்வகைக் கப்பல்களைக் கட்ட இந்தியா திட்டமிட்டுள்ளது. இந்தத் தொழில்நுட்பத்தை ரஷ்யாவின் ஆயுத ஏற்றுமதி நிறுவனமான ரோசோபோரோன் எக்ஸ்போர்ட் நிறுவனத்திடம் இருந்து பெறுவதற்கான 3565 கோடி ரூபாய் மதிப்புள்ள உடன்படிக்கை இன்று கையொப்பமாக உள்ளது.

ரஷ்யத் தொழில்நுட்பத்தில் கட்டப்படும் போர்க்கப்பல்கள் 2027-ஆம் ஆண்டு கடற்படையில் சேர்க்கப்படும் என தெரிவித்துள்ளது. கிரிகோரோவிச் வகையைச் சேர்ந்த 2 போர்க்கப்பல்களை 7131 கோடி ரூபாய் மதிப்பில் ரஷ்யாவிடம் இருந்து வாங்கும் உடன்படிக்கை கையொப்பமாகிச் சில வாரங்களிலேயே இந்தத் தொழில்நுட்பப் பரிமாற்ற உடன்படிக்கை செய்துகொள்ளப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் கலினின்கிராட் துறைமுகத்தில் கட்டப்பட்டு வரும் அந்தக் கப்பல்கள் 2022-ஆம் ஆண்டு இந்தியக் கடற்படையில் சேர்க்கப்படும் என தெரிவித்துள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : India ,Russia ,Goa Shipyard , Today,signed,India-Russia, 2 warships , Goa Shipyard
× RELATED இந்தியாவில் நடந்து வரும்...