×

மெசன்ஜர் செயலியில் வீடியோக்களை பார்க்கும் புது வசதியை அறிமுகப்படுத்தும் சோதனையில் ஃபேஸ்புக் நிறுவனம்

கலிபோர்னியா: ஃபேஸ்புக் நிறுவனம் மெசன்ஜர் செயலியில் வீடியோக்களை பார்த்து ரசிக்க புது வசதியை அறிமுகப்படுத்துவதற்கான சோதனையை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. புது வசதியை கொண்டு பயனர்கள் தங்களது சாதனங்களில் குரூப் சாட் (Group chat) மூலம் நண்பர்களுடன் இணைந்து வீடியோக்களை பார்க்க முடியும். மேலும் பயனர்கள் அந்த வீடியோவைப் பார்த்துக் கொண்டே அதை பற்றி பேசிக்கொள்ளவும் முடியும். ஃபேஸ்புக் நிறுவனத்திற்குள் சோதனை செய்யப்படும் இந்த புதிய அம்சம் குறித்து முழுவிவரம் விரைவில் வெளியாகலாம் என்று தெரியவந்துள்ளது.

இந்த சிறப்பம்சமானது ஃபேஸ்புக் நிறுவனத்தின் புதிய வருவாய் வாய்ப்புகளை அதிகப்படுத்தும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஃபேஸ்புக் செயலியில் நியூஸ் ஃபீட் (Newsfeed) மூலம் வரும் விளம்பர வருவாய் வளர்ச்சியானது தற்போது மந்தநிலையில் இருப்பதால், ஃபேஸ்புக் நிறுவனம் சமீபத்தில் வருவாய் வாய்ப்புகளை அதிகரிக்க மெசன்ஜர் (messenger) மற்றும் இன்ஸ்டாகிராம் (Instagram) போன்ற துணை நிறுவனங்களில் கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : company ,Messenger , Facebook,company,experiment,introduce,new feature,videos,Messenger app
× RELATED திருப்பூரில் பனியன் கம்பெனியை...