×

4 நாட்களாக மின்சாரம், குடிநீர் இல்லை.... நடவடிக்கை எடுக்க கோரி மணப்பாறையில் பொதுமக்கள் போராட்டம்

திருச்சி : கஜா புயல் பாதித்து 4 நாட்களாகியும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் சீரமைப்பு மற்றும் நிவாரண பணிகள் முழுமையாக நிறைவடையவில்லை. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் திருச்சி, மணப்பாறை பகுதிகளில் இதுவரை மின் விநியோகம் மற்றும் குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கஜா புயலால் திருச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. புயல் காற்றால் ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. மேலும் நூற்றுக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளன. இதையடுத்து முக்கியமாக இடங்களில் உள்ள மரங்கள் மற்றுமே அகற்றப்பட்டு போக்குவரத்து சரி செய்யப்பட்டுள்ளது.

பல்வேறு பகுதிகளில் புயலால் விழுந்த மரங்கள் இன்னும் அகற்றப்படாமலே உள்ளன. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மின் கம்பங்கள் சாய்ந்துள்ளதால் 4 நாட்களாக மின்தடை நிலவுகிறது. இதனால் குடிநீர் இல்லாமல் தவித்து வருகின்றனர். இதையடுத்து அரசு இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்து, கோவில்பட்டி சாலையில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே திருச்சியில் சுகாதாரப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மற்ற கடலோர மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் திருச்சியில் பாதிப்புகள் குறைவாக உள்ளது, எனவே திருச்சியில் இருந்து சுமார் 400க்கும் மேற்பட்ட மின்வாரிய பணியாளர்கள் டெல்டா மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Manapara , Marriage, Struggle, Gaja Storm, Heavy Rain
× RELATED கோவில்பட்டி அருகே கார் மோதி முதியவர் பலி